மானங்கெட்ட மோடி அரசே, மாநில அரசே..திமுகவின் ஜல்லிக்கட்டு ஆர்ப்பாட்டத்தில் ஆக்ரோஷ கோஷம்
ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கேட்டு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் சென்னையில் இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.
சென்னை: ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கேட்டு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் சென்னையில் இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்ட கோஷங்கள் இவைதான்:
ஆர்ப்பாட்டம், ஆர்ப்பாட்டம் ஜல்லிக்கட்டு உரிமையை நிலை நாட்ட ஆர்ப்பாட்டம்.

ஐயா தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும், எங்கள் தலைவர் கலைஞரும், எங்கள் அண்ணன் தளபதியும் கட்டி காக்கும் அறவழியில் ஆர்ப்பாட்டம், ஆர்ப்பாட்டம்.
கண்டிக்கிண்றோம், கண்டிக்கின்றோம். தமிழக மக்களின் உரிமைகளை அவமதிக்கும் மத்திய அரசை கண்டிக்கிறோம். தடுக்காதே, தடுக்காதே வீரத்தமிழர் விளையாட்டை, மானத்தமிழர் விளையாட்டை தடுக்காதே. மத்திய அரசே தடுக்காதே.
அனுமதி கொடு, அனுமதி கொடு. ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கொடு. தடுக்காதே, தடுக்காதே வீரத்தமிழன் விளையாட்டை வேண்டுமென்றே தடுக்காதே. நிறுத்தாதே, நிறுத்தே, மானத்தமிழன் விளையாட்டை மடத்தனமாய் நிறுத்தாதே. ஜல்லிக்கட்டு எங்கள் உரிமை. தடுக்க நினைப்பது என்ன மடமை.
யானை பந்தையம் நடக்குது அங்கே. மாட்டு பந்தையம் தடுப்பது இங்கே. ஒட்டக பந்தையம் நடக்குது அங்கே. மாட்டு பந்தையம் தடுப்பது இங்கே. மோடி அரசே மத்திய அரசே, ஜல்லிக்கட்டு தடையை நீக்கு. நடத்த விடு.., நடத்தவிடு.., தமிழக அரசே ஜல்லிக்கட்டை நடத்தவிடு.
வீரம் நிறைந்த விளையாட்டு, தமிழன் விரும்பும் போர்ப்பாட்டு. தடுக்காதே.., தடுக்காதே.., ஜல்லிக்கட்டை தடுக்காதே. மத்திய அரசே மத்திய அரசே, மானங்கெட்ட மோடி அரசே. அவசர சட்டம் பிறப்பித்து.., அவசர சட்டம் பிறப்பித்து.., ஜல்லிக்கட்டை நடத்தவிடு. நடவடிக்கை எடு.., நடவடிக்கை எடு... மாநில அரசே, மாநில அரசே, மானம் கெட்ட மாநில அரசே. நடவடிக்கை எடு
செயல் தலைவர் ஆணை கேட்டு செந்தமிழ் நாடு திரளுதுபார். திசைகள் கூட அவர் சொல் கேட்டு சேர்ந்து வந்து நிற்குது பார். சரியில்ல.. சரியில்ல.. மத்திய அரசு சரியில்ல. மத்திய அரசை கண்டிக்காத தமிழக அரசும் சரியில்லை. தடை செய், தடை செய் பீட்டா அமைப்பை தடை செய்.
ஜல்லிக்கட்டு எங்கள் உரிமையடா,. தடுக்க நினைக்கும் முயற்சி எல்லாம் சுய நல கதைகளடா. நிறுத்தாதே நிறுத்தாதே மானத்தமிழர் விளையாட்டை மீண்டும் மீண்டும் நிறுத்தாதே. இவ்வாறு கோஷங்கள் எழுப்பப்பட்டன. அவற்றை ஸ்டாலினும் வாசித்தார்.
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி












Click it and Unblock the Notifications