திருச்சி அருகே தடையை மீறி ஜல்லிக்கட்டு.. போலீஸ் தடியடியால் பரபரப்பு
திருச்சி அருகே, போலீசார் எச்சரிக்கையையும் மீறி ஜல்லிக்கட்டு நடைபெற்றதால், ஜல்லிக்கட்டில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.
Subscribe to Oneindia Tamil
திருச்சி: திருச்சி மாவட்டம், லால்குடி அருகே சில்லக்குடியில் 50க்கும் மேற்பட்ட காளைகளுடன் இன்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. ஜல்லிக்கட்டுக்கு தடையுள்ள நிலையில், அருகேயுள்ள நத்தம், அரசூர் ஆகிய கிராமங்களிலும் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடைபெற்றது.
போலீசார் எச்சரிக்கையையும் மீறி ஜல்லிக்கட்டு நடைபெற்றதால், ஜல்லிக்கட்டில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஜல்லிக்கட்டு போராட்டங்களில் ஈடுபடுவோர் மீது போலீசார் தடியடி நடத்தவில்லை என முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தார். அதேநேரம், ஜல்லிக்கட்டு நடத்தியோர் மீது தடியடி நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதேபோல மதுரை மாவட்டம் மேலூர் அருகே 70 காளைகளை அவிழ்த்துவிட்டு ஜல்லிக்கட்டு நடைபெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications