மதுரை விளாங்குடியில் தடையை மீறி ஜல்லிக்கட்டு… 40 காளைகள் விரட்டு.. போலீஸ் குவிப்பால் பதற்றம்
மதுரையில் ஆங்காங்கே தடையை மீறி ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. விளாங்குடியில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது.
மதுரை: மதுரை விளாங்குடியில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. சுமார் 40க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன.
விளாங்குடியில் உள்ள மைதானத்தில் ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகள் கடந்த 2 நாட்களாக நடைபெற்றன. இதற்காக தற்காலிக வாடிவாசல் அமைக்கப்பட்டது. இதில் 40க்கும் மேற்பட்ட காளைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. இதனை அடக்குவதற்காக நூற்றுக் கணக்கான இளைஞர்கள் அந்தப் பகுதியில் குவிந்தனர். மேலும் வடமஞ்சு விரட்டும் நடைபெற்றது.

இதனைப்போன்றே, திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே நல்லாம்பட்டியில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் நடத்தப்பட்ட இந்த ஜல்லிக்கட்டில், 30க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற மாடுபிடி இளைஞர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து ஆங்காகே ஜல்லிக்கட்டு நடத்தியதற்காக போலீசார் இளைஞர்களை கைது செய்து வருகின்றனர். இதனால் மதுரை அருகே குலமங்கலம் சாலையில் போலீஸை கண்டித்து முடக்காத்தான் கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications