ஜல்லிக்கட்டு: 13ம் தேதி மதுரையில் 3 அதிமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்
மதுரை: ஜல்லிக்கட்டின் மீதான தடையை நீக்க சட்டப்பூர்வ நடவடிக்கையை மத்திய அரசு எடுக்கக்கோரி அதிமுக கூட்டணி கட்சிகளான மனிதநேய ஜனநாயக கட்சி, முக்குலத்தோர் புலிப்படை, தமிழக கொங்கு இளைஞர் பேரவை ஆகியவை வரும் 13ம் தேதி மதுரையில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளன.
மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் எம்.தமிமுன் அன்சாரி, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ், தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் உ.தனியரசு ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அந்த அறிக்கையில் அவர்கள் கூறியிருப்பதாவது,
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டாம் ஜல்லிக்கட்டின் மீதான தடையை நீக்க சட்டப்பூர்வ நடவடிக்கையை மத்திய அரசு எடுக்கக்கோரி எதிர்வரும் 13-1-2017 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மதுரையில் மனிதநேய ஜனநாயக கட்சி, முக்குலத்தோர் புலிப்படை, தமிழக கொங்கு இளைஞர் பேரவை ஆகிய 3 கட்சிகளும் இணைந்து மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்தை நடத்தவிருக்கின்றன.
இதை மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர் எம்.தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ., முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் எம்.எல்.ஏ., தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் உ.தனியரசு எம்.எல்.ஏ. ஆகியோர் அறிவித்துள்ளனர்.
இதில் சாதி, மத, கட்சி சார்பற்று அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடப்பட்டிருக்கிறது என்று அவர்கள் அதில் தெரிவித்துள்ளனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications