பழங்காலத் தமிழர் வாழ்வியலில் ஜல்லிக்கட்டு.. உறுதி செய்த கீழடி அகழாய்வில் கிடைத்த மாட்டு எலும்புகள்!
சென்னை: கீழடி அகழ்வாராய்ச்சியில் கிடைத்த மாட்டு எலும்புகளை, புனேவில் உள்ள டெக்கன் கல்லூரியில் ஆய்வு செய்ததன் வாயிலாக, அவை ஜல்லிக்கட்டில் ஈடுபடும் நாட்டு மாடுகள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சங்க இலக்கியங்களில் ஜல்லிக்கட்டு இருந்தது, ஜல்லிக்கட்டு பழங்காலத் தமிழ் மக்களின் வாழ்வியலைச் சார்ந்தது என்பதையும் இது உறுதி செய்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. கீழடியில் மேற்கொண்ட அகழாய்வு அறிக்கைகளை தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் மத்திய தொல்லியல் துறைக்கு அனுப்பினார். ஆனால், அந்த ஆய்வு அறிக்கையில் அறிவியல் பூர்வமான, தொழில்நுட்ப ரீதியிலான ஆய்வு தகவல்கள் இல்லை என மத்திய அரசு அதனை மீண்டும் திருப்பி அனுப்பியது.
மேலும், இந்த அகழாய்வின் முதல் இரண்டு கட்டம் நடைபெற்ற அகழாய்வுகள் மற்றும் அதன் அறிக்கை ஆகியவை வெளியிடப்படும் முன்பே அந்த ஆய்வை மேற்கொண்ட அமர்நாத் ராமகிருஷ்ணன் அந்தப் பணியிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்டு, அந்த அகழாய்வுப் பணிகளை தொல்லியல்துறை முடித்துக்கொண்டது.
அதன் பின் தற்போது வரை 10 கட்ட அகழாய்வுகளை தமிழகத் தொல்லியல் துறை நடத்தியுள்ளது. அதில் கிடைத்த ஆயிரக்கணக்கான பழம்பொருள்களைக் கொண்டு அருங்காட்சியகம் வைக்கும் அளவுக்கு தொல் பொருள்கள் கிடைத்துள்ளன. தமிழகத் தொல்லியல் துறை அறிக்கைகள், ஒவ்வோர் ஆய்வின் முடிவிலும் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கீழடியில் கிடைத்த மண்டை ஓடுகளை வைத்து 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர் முகங்கள் இங்கிலாந்தில் உள்ள ஆய்வகத்தில் 3டி முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இங்கிலாந்தில் உள்ள லிவர்பூல் ஜான் மூர்ஸ் பல்கலைக்கழகத்தின் உதவியுடன் இரண்டு மண்டை ஓடுகளில் புனரமைக்கப்பட்ட முக அம்சங்களை கண்டுபிடித்துள்ளனர்.
மேலும், கீழடி அகழ்வாராய்ச்சியில் கிடைத்த மாட்டு எலும்புகளை, புனேவில் உள்ள டெக்கன் கல்லூரியில் ஆய்வு செய்ததன் வாயிலாக, அவை ஜல்லிக்கட்டில் ஈடுபடும் நாட்டு மாடுகள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சங்க இலக்கியங்களில் ஜல்லிக்கட்டு இருந்தது, தமிழ் மக்களின் வாழ்வியலை சார்ந்தது என்பதையும் இது உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications