போஸ்டரைத் தொடர்ந்து சசியை நேரில் சந்தித்து நன்றி.. 'அடங்காத' ஜல்லிக்கட்டு பேரவை
ஜல்லிக்கட்டுக்காக பல லட்சம் மாணவர்கள் போராடிய நிலையில் சசிகலாவுக்கு தொடர்ந்து நன்றி தெரிவித்து வருகிறது ஜல்லிக்கட்டு பேரவை.
சென்னை: பல லட்சக்கணக்கான மக்கள் போராடி பெற்றது ஜல்லிக்கட்டு உரிமை. ஆனால் ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர சட்டம் இயற்ற நடவடிக்கை எடுத்தவர் அதிமுகவினரின் 'சின்னம்மா' சசிகலாதான் என ஜல்லிக்கட்டு பேரவை அடம்பிடிப்பது மாணவர்களை கொதிப்படைய வைத்துள்ளது.
வரலாறு காணாத யுகப் புரட்சியை தமிழ் மண்ணில் நிகழ்த்தியது இளைஞர் படை. பல லட்சக்கணக்கான இளைஞர்கள் பலநாட்கள் அறவழியில் போராடி ஜல்லிக்கட்டு எனும் பண்பாட்டு அடையாளத்தை மீட்டெடுத்து சரித்திரம் படைத்துள்ளனர்.

இந்த ஜல்லிக்கட்டு புரட்சியில் களம் கண்ட மாணவர்களுக்கு உதவி போலீசாரின் நரவேட்டையில் சிக்கி சொல்ல முடியாத துயரங்களில் சிக்கித் தவிக்கின்றனர் மீனவ மக்கள். இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் ஜல்லிக்கட்டு சட்டம் நிறைவேற்ற காரணமாக இருந்த சின்னம்மாவுக்கு நன்றி என போஸ்டர் அடித்தார் ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் பி. ராஜசேகர்.

ஜல்லிக்கட்டு பேரவையின் இந்த செயல் போராடிய இளைஞர், மாணவர்களை கொந்தளிக்க வைத்தது. இந்த நிலையில் சசிகலாவை நேரில் சந்தித்து, ஜல்லிக்கட்டு அவசர சட்டம் கொண்டுவர காரணமாக இருந்ததற்காக நன்றி தெரிவித்திருக்கிறார் ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் பி. ராஜசேகர்.
ஜல்லிக்கட்டு பேரவையின் தொடரும் இந்த செயல் உயிரைக் கொடுத்து போராடிய தங்களை அவமதிப்பதாக இருக்கிறது என சமூக வலைதளங்களில் ஆவேசம் காட்டுகிறது இளைஞர் படை.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications