புதுக்கோட்டை அருகே விஷால், திரிஷா படங்களுக்கு செருப்பு மாலை அணிவித்து எதிர்ப்பு
நடிகை திரிஷா, நடிகர் விஷால் ஆகியோர் ஜல்லிக்கட்டை எதிர்ப்பதாக தகவல்கள் பரவியுள்ளது. இதனால் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் இவர்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே நடிகர்கள் விஷால், திரிஷா படங்களுக்கு செருப்பு மாலை அணிவித்து ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்துள்லது. இதனால் கடந்த 2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த மாடுவீரர்களுக்கு ஆதரவாக சென்னையில் துவங்கிய போராட்டம் இன்று தமிழகம் முழுவதும் காட்டுத் தீ போல் பரவி நடைபெற்று வருகிறது.

சமூக வலைத்தளங்கள் மூலம் ஒன்றிணைந்த லட்சக்கணக்கான இளைஞர்கள், பெண்கள், சமூக ஆர்வலர்கள் தமிழகர்களின் பாரம்பரியம் மிக்க ஜல்லிக்கட்டு விளையாட்டை காக்க மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுத்திருக்கின்றனர். சென்னை மெரினாவில் நடைபெற்று வரும் போராட்டம் 2வது நாளாக மிகத் தீவிரமடைந்துள்ளது.
அதேபோல் மதுரை, கோவை, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட பல பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தை தாண்டி கடல் கடந்து அமெரிக்கா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட நாடுகளிலும் போராட்டங்கள் வலுத்துள்ளது. இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் கடந்த இரு தினங்களாக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இதனிடையே நடிகர் சங்க தலைவர் விஷால், நடிகை திரிஷா ஆகியோருக்கு கண்ணீர் அஞ்சலி பதாகைகள் வைத்து செருப்பு மாலைகள் அணிவித்தும் போராட்டக்காரர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
முன்னதாக நடிகை திரிஷா, நடிகர் விஷால் ஆகியோர் ஜல்லிக்கட்டை எதிர்ப்பதாக தகவல்கள் பரவியது. இதனால் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் இவர்கள் மீது கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications