நல்லாக் குடிப்பார், அழகிகளைப் பிடிப்பார், எதிரிகளை அடிப்பார்.. வந்துட்டாருய்யா "நாட்டி பாய்" 007...!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இதோ மீண்டும் வந்து விட்டது ஜேம்ஸ் பாண்ட் அலை. உலகமெங்கும் ரிலீஸாகியுள்ள ஸ்பெக்டர் நாளை இந்தியாவுக்கும் வருகிறது. தமிழக மக்கள் ஜேம்ஸின் இன்னொரு அவதாரத்தை, அதுவும் தமிழிலேயே பேசப் போகும் ஜேம்ஸைப் பார்க்க ஆவலாக உள்ளனர். இந்த நேரத்தில் ஜேம்ஸ் பாண்டின் சில குசும்புகளைத் திரும்பிப் பார்ப்போம்.

ஜேம்ஸ் என்றால் அதிரடி என்பதை விட "மப்பும், மந்தாரமும்" இன்னொரு பிரிக்க முடியாத அங்கம். ஒவ்வொரு படத்திலும் அவர் அடித்த லூட்டிகள், ஊட்டி குளிரை விட படா பட்டாசாக இருக்கும்.

ஜேம்ஸ் பாண்ட் யார் என்று கேட்டால் இப்படிச் சொல்லலாம் சுருக்கமாக... நல்லாக் குடிப்பார், அழகிகளைப் பிடிப்பார், எதிரிகளை அடிப்பார். ஜேம்ஸ் பாண்ட் படத்தில் பன்ச் வசனம், டைமிங் வசனம், டபுள் மீனிங் வசனத்திற்குக் குறைச்சலே கிடையாது. அதிலும் படுக்கை அறை வசனம் ஏக பிரபலம்.

அவரது பிரபலமான வசனங்கள் குறித்த ஒரு ரவுண்ட் அப்...

கத்துக்கிறது எனக்கு பிடிக்கும்

கத்துக்கிறது எனக்கு பிடிக்கும்

பாண்ட்: புதுசா ஒரு tongue கத்துக்கிறது எனக்கு எப்பவுமே ரொம்பப் பிடிக்கும்.
மணிபென்னி: நீ ஒரு கன்னிங் "லிங்குயிஸ்ட்" ஜேம்ஸ்..!
(டுமாரோ நெவர் டைஸ்)

எவ்வளவு பெரிய வாய்

எவ்வளவு பெரிய வாய்

தாத்யானா ரொமனோவா: எனக்கு வாய் பெருசு என்று நினைக்கிறேன்.
பாண்ட்: இல்லை, சரியான சைஸில்தான் உள்ளது.. எனக்கு.
(ஃபிரம் ரஷ்யா வித் லவ்)

கிறிஸ்துமஸ் இன்னொரு முறையும் வரும்

கிறிஸ்துமஸ் இன்னொரு முறையும் வரும்

பாண்ட்: நான் உன்னை தப்பா நினைச்சுட்டேன்
கிறிஸ்துமஸ் ஜோன்ஸ்: அப்படியா, எப்படி
பாண்ட்: கிறிஸ்துமஸ் வருடத்திற்கு ஒருமுறைதான் வரும் என்று நினைத்தேன்.
(தி வேர்ல்ட் இஸ் நாட் எனஃப்)

அப்ப கண்டிப்பா போகனுமே!

அப்ப கண்டிப்பா போகனுமே!

விஜய் அமிர்தராஜ்: அந்தத் தீவு முற்றிலும் பெண்களுக்கானது, ஆண்களுக்கு அனுமதி இல்லை என்று நினைக்கிறேன்.
பாண்ட்: என்ன ஒரு பாலின பாகுபாடு.. கண்டிப்பாக நான் அந்தத் தீவுக்குப் போய ஆக வேண்டும்.
(ஆக்டோபஸ்ஸி)

நீ வேற.. நான் வேற

நீ வேற.. நான் வேற

பாண்ட்: நீ என்னை மாதிரி கிடையாது
அழகி: ஏன்.. எனக்கு என்ன பாதி மூளையா இருக்கு
பாண்ட்: அப்படி இல்லை. நீ சிங்கிள்... அதான்!
(கேஸினோ ராயல்)

இல்லை.. பாத்துட்டிருக்கேன்

இல்லை.. பாத்துட்டிருக்கேன்

பாண்ட்: கவலைப்படாதே, நான் இங்கு இருக்க வேண்டியவன் அல்ல.
ஹனி ஹைடர்: என்ன செய்கிறாய், அடைக்கலம் புக இடம் பார்க்கிறாயா
பாண்ட்: இல்லை, சும்மா பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
(டாக்டர் நோ)

என்னாட கார்

என்னாட கார் "டிரை"யாத்தான் இருக்கு

பாத்திமா பிளஷ்: அடடா, நான் உன்னை நனைச்சுட்டேனே
பாண்ட்: பரவாயில்லை. என்னாட கார் "டிரை"யாத்தான் இருக்கு.. .My name is James!
(நெவர் சே நெவர் எகெய்ன்)

ஓடிப் போயிரு

ஓடிப் போயிரு

லகாய்ஸ்: பணத்தை எடுத்துட்டு தப்பிச்சுப் போகும் வாய்ப்பைத் தர்றேன், ஓடிப் போயிரு
பாண்ட்: வாழ்க்கையை எடுத்துக்கிட்டு தப்பிச் செல்லும் வாய்ப்பை நான் உனக்குத் தர்றேன். நீ ஓடிரு
(தி வேர்ல்ட் இஸ் நாட் எனஃப்)

அப்ப நீ சாகலையா

அப்ப நீ சாகலையா

புளோபெல்ட்: ஜேம்ஸ் பாண்ட், என் பெயர் எர்னஸ்ட் ஸ்டாவ்ரோ புளோபெல்ட். உன்னை ஹாங்காங்கில் கொன்று விட்டதாக சொன்னார்களே..
பாண்ட்: எஸ்.. இது என்னோட 2வது வாழ்க்கை.
(யு ஒன்லி லிவ் டுவைஸ்)

நான் போகவே இல்லையே

நான் போகவே இல்லையே

எம்: பாண்ட், எனக்கு நீ மீண்டும் தேவை
பாண்ட்: நான்தான் போகவே இல்லையே
(குவாண்டம் ஆப் சொலஸ்)

ரொம்பச் சரியா சொன்னே!

ரொம்பச் சரியா சொன்னே!

ஜெனியா: நீடிக்கும் வரை அனுபவி ஜேம்ஸ்.
பாண்ட்: ரொம்பச் சரியா சொன்னே!
(கோல்டன் ஐ)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+