சென்டிரல் ரயில் நிலையத்தில் சுடசுட ரூ.15க்கு கிடைக்கும் மசால் தோசை.. பயணிகள் மகிழ்ச்சி
சென்னை: சென்டிரல் ரயில் நிலைய உணவகத்தில் 15 ரூபாய்க்கு மசாலா தோசை கிடைக்கிறது. இதேபோல பல உணவுகளும் குறைந்த விலைக்கு கிடைப்பதால் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் தெற்கு ரெயில்வே சார்பில் 'ஜன் ஆஹார்' எனும் உணவகம் கடந்த 3 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.

இங்கு 2 இட்லி ரூ.12க்கும், பொங்கல் ரூ.15க்கும், ரவா உப்புமா ரூ.15க்கும், 2 வடை ரூ.16க்கும், 2 உருளைக்கிழங்கு போண்டா ரூ.12க்கும், ரவா கேசரி ரூ.9க்கும், தயிர்சாதம் ரூ.17க்கும், சாம்பார் சாதம் ரூ.19க்கும், புளிசாதம் ரூ.20க்கும், லெமன் சாதம் ரூ.18க்கும், தேங்காய் சாதம் ரூ.16க்கும், தயிர்வடை ரூ.14க்கும், காபி ரூ.10க்கும், டீ ரூ.5க்கும், சப்பாத்தி ரூ.28க்கும், தக்காளி சூப் ரூ.15க்கும், இரு வெஜ் கட்லெட் ரூ.25க்கும், வெஜ் பிரியாணி ரூ.43க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 22ம் தேதி முதல் மசாலா தோசை கவுண்ட்டர் திறக்கப்பட்டது. ரூ.15க்கு வழங்கப்படும் மசாலா தோசை பயணிகளை வெகுவாக கவர்ந்து உள்ளது. காலை 6.30 மணி முதல் 10 மணி வரையிலும், பிற்பகல் 3 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் மசாலா தோசை விற்பனை செய்யப்படுகிறது. இங்கு பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.
ஏற்கனவே சென்ட்ரலிலுள்ள சில தனியார் முன்னணி உணவகங்கள் கொள்ளை விலையில் உணவு பொருட்களை விற்று வருகின்றன. இந்நிலையில் ஜன் ஆஹார் உணவகம், பயணிகளுக்கு ஆறுதலாக அமைந்துள்ளது. நாடு முழுக்க முக்கிய ரயில் நிலையங்களில் இந்த உணவகம் செயல்படுவது குறிப்பிடத்தக்கது.
-
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி?












Click it and Unblock the Notifications