கூட்டணி பேச்சுவார்த்தை... மீண்டும் சென்னை வருகிறார் ஜவடேகர்
சென்னை: சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி குறித்து பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காக பாஜகவின் தமிழக பொறுப்பாளர் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மீண்டும் சென்னை வருகை தர உள்ளார்.
சட்டசபை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைவதற்கு பெரிய கட்சிகள் எதுவும் முன்வரவில்லை. பாஜகவைப் பொறுத்தவரையில் ஒற்றை நம்பிக்கையாக இருப்பது தேமுதிகதான்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை கடந்த சனிக்கிழமையன்று பிரகாஷ் ஜவடேகர் சந்தித்து பேசியிருந்தார். ஆனால் இச்சந்திப்பை மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டும் என சுருக்கி அறிக்கை விட்டது தேமுதிக. இது பாஜகவுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி, புதிய நீதிக் கட்சி என இருக்கிற 'உதிரி'கட்சிகளையெல்லாம் கூட்டணியில் சேர்க்கும் வேலையை ஜவடேகர் மேற்கொண்டார்.
இந்நிலையில் இன்று காலை சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், கூட்டணிப் பேச்சுவார்த்தைகளை நடத்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மீண்டும் சென்னை வருவதாக கூறியுள்ளார். அதேபோல் பாஜக தேசியத் தலைவர் அமித்ஷாவும் தமிழகம் வருகை தர உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அமித்ஷா, ஜவடேகர் இருவரும் சென்னையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை சந்தித்து பேச வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
-
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்!












Click it and Unblock the Notifications