மேஜர் முகுந்த் வரதராஜன் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் -ஜெ. அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

Jaya announces solatium to the bereaved Army Major Mukund's family
சென்னை: காஷ்மீரில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் உயிர்த் தியாகம் செய்த சென்னை ராணுவ அதிகாரி மேஜர் முகுந்த் வரதராஜன் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஜெயலலிதா அவரது குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு...:

ஜம்மு காஷ்மீர் மாநிலம், சோபியான் பகுதியில் 25.4.2014 அன்று தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில், 44-வது ராஷ்டிரிய துப்பாக்கிகள் படைப் பிரிவில் பணியாற்றி வந்த சென்னை, தாம்பரத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன்.

தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்த மேஜர் முகுந்த் வரதராஜனை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் வழங்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+