மழையால் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிவாரணம்: ஜெ. அறிவிப்பு

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
தமிழ்நாட்டில் அண்மையில் பெய்த மழையின் காரணமாக, 18-10-2013 அன்று சிவகாசி வட்டம், திருத்தங்கல் கிராமத்தைச் சேர்ந்த சண்முகைய்யா என்பவரின் மகன் பாலசுப்பிரமணியன்; ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி உள்வட்டம், புஞ்சைலக்காபுரம் கிராமத்தைச் சேர்ந்த சீரங்கன் என்பவரின் மகன் சத்தி; கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வட்டம், கோதநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த பிரான்சிஸ் என்பவரின் மகன் பெர்க்மான்ஸ் உயிரிழந்தனர்.
19-10-2013 அன்று திருநெல்வேலி மாவட்டம், மானூர் குறுவட்டம், எட்டான்குளம் கிராமத்தைச் சேர்ந்த சீவலப்பேரியான் என்பவரின் மனைவி மரியம்மாள்; வாகைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த கருத்தப்பாண்டி என்பவரின் மகன் துரைப்பாண்டி, செல்லக்கண்ணு என்பவரின் மகன் லெட்சுமணன் மரணமடைந்தனர்.
20-10-2013 அன்று காஞ்சீபுரம் மாவட்டம், செய்யூர் வட்டம், பவுந்த கரணை கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மகன் அன்பு; செய்யூர் வட்டம், பூங்குளம் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்கிற டேவிட் என்பவரின் மனைவி பூஜா;-ஆகியோர் இடி, மின்னல் தாக்கி உயிரிழந்தனர்.
மின்சாரம் தாக்கி சாவு
23-10-2013 அன்று வீட்டின் அருகே அறுந்து கிடந்த மின்சார கம்பியை மிதித்ததால் திருவள்ளூர் மாவட்டம், போத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சித்திரை என்பவரின் மகன் கேசவன் மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த துயர சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.1 லட்சம் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு ஜெயலலிதா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications