அதிமுகவில் தொடரும் களையெடுப்பு! கேரளா நிர்வாகிகள் நியமனம்!!
சென்னை: தமிழகத்தினைப் போலவே கேரளாவிலும் அம்மாநில கழக செயலாளர் பொறுப்பில் இருக்கும் ஸ்ரீனிவாசன் வேணுகோபால், பொருளாளர் பொறுப்பில் இருக்கும் பிரதீப் ஆகியோரை பொறுப்பில் இருந்து விடுவித்து மாற்றி அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அவரது அறிக்கையின்படி, கேரள மாநிலத்தின் மாநில, மாவட்ட கழகம், ஜெயலலிதா பேரவை, அண்ணா தொழிற்சங்கம், சிறுபான்மையினர் நலப்பிரிவு ஆகியவற்றின் நிர்வாகிகளாகக் கீழ்க்கண்டவர்கள் கீழ்க்காணும் பொறுப்புகளுக்கு இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்.

கேரளா மாநில செயலாளர் - பிரதீப்,
பொருளாளர் - ஸ்ரீனிவாசன் வேணுகோபால்.
சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளர் - டாக்டர் பஷீர்.
திருவனந்தபுரம் மாவட்ட ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் - சதீஷ்குமார்.
இடுக்கி மாவட்ட ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலாளர் - அப்துல்காதர்.
இடுக்கி மாவட்ட அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் - ராஜப்பன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போன்று தென் சென்னை மாவட்ட செயலாளர் எம்.எம்.பாபுவை அப்பதவியில் இருந்து விடுவித்து வி.என்.ரவியை நியமித்துள்ளார் ஜெயலலிதா என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications