அதிமுகவுக்கு மாற்றுக் கட்சி பாஜக; திமுகவின் செல்வாக்கு குறைந்து வருகிறது- சோ
சென்னை: ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு தான் தமிழக அரசியலை தீர்மானிக்கும் என்று பத்திரிக்கையாளர் சோ தெரிவித்துள்ளார்.
துக்ளக் வார இதழின் 45வது ஆண்டு நிறைவு விழா சென்னை மியூசிக் அகாடமி அரங்கில் புதன்கிழமை நடந்தது. விழாவில் துக்ளக் ஆசிரியர் சோ கலந்து கொண்டு வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
அப்போது அவர் பேசுகையில்,

திமுக
தமிழகத்தில் ஜெயலலிதாவுக்கு மாற்று ஆள் ஒருவரும் இல்லை. அதிமுகவுக்கு மாற்றுக் கட்சி என பாஜகவை கூறலாம். தமிழகத்தில் திமுகவின் செல்வாக்கு குறைந்து வருகிறது.

ஜெயலலிதா
ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு தமிழக அரசியலின் எதிர்காலத்தை தீர்மானிக்கும். அவர் வழக்கில் இருந்து விடுவிக்கபட்டால் 2016ம் ஆண்டு நடக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வரும். தீர்ப்பு ஒருவேளை அவருக்கு எதிராக இருந்தால் அமையவிருக்கும் கூட்டணிகள் மற்றும் மக்களின் மனநிலையை பொருத்து தேர்தல் முடிவு இருக்கும்.

சாதகம்
சொத்துக்குவிப்பு வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பில் ஜெயலலிதாவுக்கு சாதகமாக பல அம்சங்கள் உள்ளது என்று சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கோடிக்கணக்கான ரூபாய் கணக்குகளை நீதிபதி தோராயமாகவே மாற்றி அமைத்துள்ளார். 2010ம் ஆண்டில் லாலு பிரசாத் யாதவ் மீதான வழக்கில் பாட்னா உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மேற்கோள்காட்டி ஜெயலலிதா வழக்கில் வருமான வரித்துறை அளித்த விவரங்களை தனி நீதிபதி ஏற்கவில்லை. மேலும் பாட்னா உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டதை கணக்கில் கொள்ளவில்லை. இப்படி ஜெயலலிதாவுக்கு சாதகமாக பல அம்சங்கள் உள்ளன. இருப்பினும் இறுதித் தீர்ப்பு எப்படி இருக்கும் என்று தற்போதே கணித்துவிட முடியாது.

கருணாநிதி
'திருவாரூர் கருணாநிதியாக' மாற வேண்டி இருக்கும் என்று கருணாநிதி பாஜகவுக்கு விடுத்த எச்சரிக்கையை ஹெச். ராஜா பெரிதாக எடுக்கத் தேவையில்லை. ஏனென்றால் அந்த எச்சரிக்கை கருணாநிதியின் குடும்பத்தாருக்கு மறைமுகமாக விடுக்கப்பட்டுள்ளது. கருணாநிதி கடுமையான உழைப்பால் இந்த உயரத்திற்கு வந்தவர். குடும்பம் மற்றும் அரசியலிலும் பல பிரச்சனைகளை சமாளித்து இந்த வயதிலும் கட்சியை காத்து வருகிறார். அவருக்கு அவரின் பலம் மற்றும் எல்லை தெரிந்துள்ளதால் தான் இன்றும் அரசியலில் நிலைத்துள்ளார். அவர் 11வது முறையாக திமுக தலைவராகியுள்ளது பற்றி என்னிடம் கேட்டனர். அவர் 12வது முறையாகவும் திமுகவின் தலைவராக தேர்வு செய்யப்படுவார்.

ஆர்.எஸ்.எஸ்.
இந்து அமைப்புகள் எதைப்பற்றியாவது பேசி பாஜகவின் பெயரை கெடுக்கின்றன. அவை மோடியின் அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்தவே இவ்வாறு செய்கின்றன என்ற சந்தேகம் எழுகிறது. அதனால் ஆர்.எஸ்.எஸ். இந்து அமைப்புகளை கட்டுப்படுத்த வேண்டும்.

மோடி
பிரதமர் மோடி வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறார். அவரின் ஆட்சி மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளதால் தான் பல்வேறு மாநில சட்டசபை தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்றி வருகிறது. மோடி ஆட்சிக்கு வந்த 7 மாதத்தில் எந்த ஊழல் குற்றச்சாட்டும் எழவில்லை. தீவிரவாதத்தை கட்டுப்படுத்த ராணுவத்திற்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளதால் ஒன்றுக்கு பத்தாக பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. இதனாலேயே எல்லை பிரச்சனையை பாகிஸ்தான் சர்வதேச பிரச்சனையாக்க முயற்சி செய்கிறது.

மதமாற்றம்
தனி நபர் மதம் மாறுவதில் தவறு இல்லை. ஆனால் பலரை கட்டாயப்படுத்தி மத மாற வைப்பதை தடுக்க வேண்டும். அதற்காக கட்டாய மதமாற்ற தடை சட்டத்தை கொண்டு வருவதில் தவறு ஒன்றும் இல்லை. இந்து மதத்தில் மதமாற்றத்திற்கு வழி இல்லை. சிறுபான்மையினரின் வாக்குகளை பெறவே பாஜக தவிர பிற கட்சிகள் இதை அரசியலாக்கிக் கொண்டிருக்கின்றன.

வாசன்
தமிழக காங்கிரஸ் வசம் இருந்த வாக்குகள் வாசனிடம் சென்றுவிட்டது. அவர் நிதானமான தலைவர். பரபரப்பை ஏற்படுத்த அரசியல் செய்ய மாட்டார். அவரது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தமிழக அரசியலை தீர்மானிக்கும் கட்சியாக இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

ராஜபக்சே
ஊழல் மற்றும் குடும்ப அரசியல் ஆகியவற்றால் இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சே தோல்வி அடைந்தார். புதிய அதிபர் சிறிசேன தனது சிங்கள ஆதரவை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். இலங்கையை சீனாவிடம் நெருங்கவிடாமல் இந்தியா பார்த்துக்கொள்ள வேண்டும்.

டெல்லி தேர்தல்
டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி முக்கிய சக்தியாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அதே சமயம் பாஜகவுக்கு கடந்த தேர்தலை விட இம்முறை அதிக இடங்கள் கிடைக்கும்.

ரஜினி
துக்ளக் நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். மேலும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், பத்திரிக்கையாளர் எஸ். குருமூர்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணை செயலாளர் சி. மகேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications