சரத்குமார் தாயார் மரணம்... ஜெ. இரங்கல்.. அமைச்சர்கள் நேரில் அஞ்சலி

Subscribe to Oneindia Tamil

Jaya condoles the demise of Sarath Kumar's mother
சென்னை: அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும், நடிகர் சங்கத் தலைவரும், எம்.எல்.ஏவுமான சரத்குமாரின் தாயார் புஷ்பலீலா மரணமடைந்தார். அவரது மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். அமைச்சர்கள் அவர் சார்பில் நேரில் சென்று புஷ்பலீலா உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

சரத்குமாரின் தாயார் புஷ்பலீலா. இவர் நேற்று மரணமடைந்தார். இதையடுத்து முதல்வர் ஜெயலலிதா அமைச்சர்கள் குழு ஒன்றை சரத்குமார் இல்லத்திற்கு அனுப்பி வைத்தார். அவர்கள் சரத்குமாருக்கு ஆறுதல் தெரிவித்தனர். பின்னர் புஷ்பலீலா உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் முதல்வர் அளித்த இரங்கல் கடிதத்தை சரத்குமாரிடம் அவர்கள் வழங்கினர். அதில் தங்களின் அன்புத் தாயார் புஷ்பலீலா, உடல் நலக்குறைவால் இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து மிகுந்த துயரமும், வேதனையும் அடைந்தேன். தாயாரை இழந்து வாடும் தங்களுக்கும், குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இது ஈடுசெய்ய முடியாத இழப்பு என்றாலும், இந்தத் துயரத்தை தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தியையும், தைரியத்தையம் தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் இறைவன் அளிக்க வேண்டும். புஷ்பலீலாவின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என்று முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+