தமிழிசைக்கு 'வாழ்த்தோசை' குவிகிறது.. ஜெ., ராமதாஸ், விஜயகாந்த் வாழ்த்து!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் தமிழிசை செளந்தரராஜனுக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

முதல்வர் ஜெயலலிதா, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோர் தமிழிசைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

முதல்வர் ஜெயலலிதா அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில், தாங்கள் தமிழக பாரதீய ஜனதா கட்சியின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளதற்கு எனது மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக பாரதீய ஜனதா கட்சியின் தலைவராக தங்களது பணி சிறக்க எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று வாழ்த்தியுள்ளார்.

டாக்டர் ராமதாஸ்

டாக்டர் ராமதாஸ் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில், தமிழிசை சவுந்தரராஜன் அரசியல் குடும்பத்தைச் சார்ந்தவர். எனது நண்பர் குமரி அனந்தன் அவர்களின் புதல்வி. பெயருக்கேற்ற வகையில் தமிழ் மொழி மீதும், இனம் மீதும் பற்று கொண்டவர்.

தமிழகம் எதிர்கொண்டு வரும் சிக்கல்கள் குறித்து தெளிவான புரிதல் கொண்டவர். பாரதிய ஜனதாவின் மாநில துணைத் தலைவர், பொதுச்செயலாளர், தேசிய செயலாளர் உள்ளிட்ட பதவிகளில் சிறப்பாக செயல்பட்டவர். அதற்கான பரிசாக கட்சியின் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக பாரதிய ஜனதாவின் முதல் பெண் தலைவர் என்ற பெருமையைப் பெற்றுள்ள தமிழிசை சவுந்தரராஜன் அவரது புதிய பொறுப்பை திறம்பட நிறைவேற்ற மீண்டும் ஒருமுறை வாழ்த்துகிறேன். பாரதிய ஜனதாவின் தேசிய செயலாளராக ஹெச். இராஜா நியமிக்கப்பட்டிருப்பதும் மகிழ்ச்சியளிக்கும் செய்தியாகும்.

மாநில அளவில் பல்வேறு பொறுப்புகளிலும், சட்டப்பேரவை உறுப்பினராகவும் சிறப்பாக செயல்பட்ட அவர் புதிய பொறுப்பிலும் சாதிக்க எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

விஜயகாந்த்

தேமுதிக தலைவர் விஜகாந்த் வெளியிட்டுள்ள செய்தியில், தமிழக பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள முதல் பெண் தலைவரான தமிழிசை சௌந்தரராஜனின் பணி சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

இவர் மகப்பேறு மருத்துவர், தமிழ் இலக்கியவாதி, சமூக ஆர்வலர், அரசியல்வாதி என்று பல்வேறு தளங்களில் தனக்கென முத்திரை பதித்தவர் என்பதோடு அரசியலில் மூத்த தலைவர் குமரி அனந்தன் அவர்களின் புதல்வியுமான இவர் தமிழக பாஜகவின் தலைவராக திறம்பட செயலாற்றுவார் என்று உறுதியாக நம்புகிறேன்.

அதோடு பாஜகவின் தேசிய செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ள அரசியலில் நீண்ட அனுபவமும் பழகுவதற்கு எளிமையானவருமான எச்.ராஜா அவர்களுக்கும் தேமுதிக சார்பில் என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+