மெட்ரோ ரயில் ரெடி.. நாளை சோதனை ஓட்டம்.. பச்சைக் கொடி காட்டுகிறார் ஜெ.
சென்னை: சென்னையில் பெரும் பொருட் செலவில் நிர்மானிக்கப்பட்டுள்ள மெட்ரோ ரயிலின் சோதனை ஓட்டம் நாளை நடைபெறுகிறது.
முதல்வர் ஜெயலலிதா இந்த சோதனை ஓட்டத்தை கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார்.
2 வழித் தடங்களில் தற்போது அமைக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் திட்டத்தால் சென்னை நகரின் போக்குவரத்து நெரிசல் பெருமளவில் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ. 14,600 கோடி செலவில்
ரூ. 14,600 கோடி செலவில் மெட்ரோ ரயில் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

2 வழித்தடங்கள்.. 45.1 கிலோமீட்டர் தூரம்
இரு வழித் தடங்களில், கிட்டத்தட்ட 45.1 கிலோமீட்டர் தொலைவுக்கு இந்தத் திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது.

வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் வரை
23.1 கிலோமீட்டர் தொலைவிலான முதல் வழித்தடமானது வண்ணாரப்பேட்டையிலிருந்து சென்னை விமான நிலையம் வரை அமைக்கப்பட்டுள்ளது.23.1 கிலோமீட்டர் தொலைவிலான முதல் வழித்தடமானது வண்ணாரப்பேட்டையிலிருந்து சென்னை விமான நிலையம் வரை அமைக்கப்பட்டுள்ளது.

சென்டிரல் முதல் பரங்கி மலை வரை
2வது திட்டத்தின் தொலைவு 22 கிலோமீட்டர் தூரமாகும். இது சென்னை சென்டிரல் ரயில் நிலையத்திலிருந்து பரங்கிமலை வரையிலானதாகும்.

சுரங்கப்பாதையில் 11 ரயில் நிலையங்கள்
முதல் வழித்தடத்தில் சுரங்கப் பாதையில் 11 ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை வண்ணாரப்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை அமைக்கப்பட்டுள்ளது.

பூமிக்கு மேலே 6 நிலையங்கள்
சைதாப்பேட்டையிலிருந்து விமான நிலையம் வரை 6 ரயில் நிலையங்கள் பறக்கும் பாதையாக அமைக்கப்பட்டுள்ளது.

2வது தடத்தில் 8 சுரங்க ரயில் நிலையங்கள்
2வது வழித்தடத்தில் 8 ரயில் நிலையங்கள் சுரங்கப் பாதையிலும், 8 நிலையங்கள் பறக்கும் பாதையிலும் அமைக்கப்பட்டுள்ளன.

பிரேசில் பெட்டிகள்
மெட்ரோ ரயில் பெட்டிகள் பிரேசிலிலிருந்து வரவழைக்கப்பட்டுள்ளன. 4 பெட்டிகள் வாங்கப்பட்டுள்ளன. இதன் சோதனை ஓட்டம் நாளை நடைபெறுகிறது.

800 மீட்டர் ரயில் பாதையில்
800 மீட்டர் ரயில் பாதையில் நாளை நடைபெறும் சோதனை ஓட்டத்தை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார்.

2014 முதல் ஜிகுஜிகு...
நாளை தொடங்கும் சோதனை ஓட்டம் தொடர்ந்து நடைபெறும். அதன் பின்னர் 2014ம் ஆண்டு பிற்பகுதியில் கோயம்பேடு முதல் பரங்கிமலை வரை ரயில் போக்குவரத்துத் தொடங்கும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications