இன்று முதல் அம்மா உணவகத்தில் பருப்பு கடைசலுடன் சப்பாத்தி: ஜெ. தொடங்கி வைத்தார்
சென்னை: சென்னை மாநகராட்சி அம்மா உணவகங்களில் பருப்புக் கடைசலுடன் கூடிய சப்பாத்தி விற்பனையை காணொளிக் காட்சி மூலமாக முதல்வர் ஜெயலலிதா இன்று தொடங்கி வைத்தார்.
அதன்படி, அம்மா உணவகங்களில் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை 3 ரூபாய்க்கு 2 சப்பாத்தியுடன் பருப்பு கடைசல் இன்று முதல் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல ஜெயலலிதா 66 வது பிறந்தநாளை ஒட்டி பல்வேறு நலத்திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்தார்.

அம்மா உணவகம்
சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை வளாகத்திலும், சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனை வளாகத்திலும் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அம்மா உணவகங்களையும் முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.

சப்பாத்தி பருப்பு கடைசல்
அம்மா உணவகங்களில் இன்று முதல் மாலை 6 மணி முதல் 9 மணிவரை பருப்புக்கடைசலுடன் கூடிய சப்பாத்தி விற்பனையை முதல்வர் தொடங்கிவைத்தார்.

ரங்கராஜபுரம் சுரங்கப் பாதை
மேலும், ரங்கராஜபுரம் ரயில்வே சந்திக்கடவில் 1 கோடியே 74 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாதசாரிகள் மற்றும் இருசக்கர வாகனச் சுரங்கபாதை, 32 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள குறைதீர் அழைப்பு மையம் மற்றும் கட்டுப்பாட்டு அறை ஆகியவற்றை திறந்து, 546 கோடியே 61 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான குடிநீர் மற்றும் பாதாள சாக்கடைத் திட்டங்களைத் துவக்கி வைத்தார்.

பணி நியமன ஆணை
சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தில் பணியிலிருக்கும் போது உயிரிழந்த 66 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு களப்பணியாளர்களுக்கான பணி நியமன ஆணைகளை வழங்கும் அடையாளமாக 7 பேர்களுக்கு பணி நியமன ஆணையை ஜெயலலிதா வழங்கினார்.

6666 ஹெல்மெட்
ஜெயலலிதாவின் 66வது பிறந்தநாளையொட்டி தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தலைவரும், இந்திய திரைப்பட கூட்டமைப்பின் செயலாளருமான சி.கல்யாண் 6666 வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் வழங்குகிறார். இதனை முதல்வர் ஜெயலலிதா, தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார்.

பழங்குடியின மக்களுக்கு
தலைமைச் செயலகத்தில், பாங்க் ஆப் இந்தியா வங்கியின் மூலம் தாட்கோ திட்டத்தின் கீழ் பழங்குடியின மக்களுக்கு வாடகை வாகனங்கள் வாங்கவும், விவசாயிகள் மானிய விலையில் பம்பு செட்டுகள் வாங்கவும், கோடநாடு பகுதியில் 200 வீடுகளுக்கு கழிப்பறைகள் கட்டவும், பெண்கள் சுய உதவிக் குழுக்களுக்கு அவர்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும் இரு தினங்களுக்கு முன் கடன் உதவிகளை வழங்கினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications