முடிந்தது தேர்தல்.. மீண்டும் கொடநாடு பறந்தார் ஜெயலலிதா
சென்னை: நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்திற்காக கொடநாட்டிலிருந்து இறங்கி வந்திருந்த முதல்வர் ஜெயலலிதா இன்று மீண்டும் கொடநாடு புறப்படடுப் போனார்.
இனி தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு சில நாட்களுக்கு முன்னர்தான் அவர் மீண்டும் சென்னை வருவார் என்று தெரிகிறது.
தனி விமானம் மூலம் கோவைக்குப் புறப்பட்டுச் சென்ற ஜெயலலிதா அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கொடநாடு பயணமாகிறார்.

சிறுதாவூர் டூ கொடநாடு
ஆரம்பத்தில் சென்னை அருகே சிறுதாவூரில் உள்ள பங்களாவில்தான் அவ்வப்போது ஜெயலலிதா ஓய்வெடுப்பது வழக்கம். ஆனால் சில ஆண்டுகளாக அவர் கொடநாடு எஸ்டேட்டுக்குப் போய் வருகிறார்.

அங்கிருந்தபடியே அரசுப் பணி
அதேபோல அரசுப் பணியையும் அவர் கொடநாடு எஸ்டேட் வளாகத்திலேயே அமைக்கப்பட்டுள்ள தற்காலிக அலுவலகத்தில் இருந்து பார்த்து வருகிறார்.

கொடநாட்டில் ரெடியான வேட்பாளர் பட்டியல்
லோக்சபா தேர்தல் தொடர்பான பூர்வாங்கப் பணிகளையும் கூட ஜெயலலிதா கொடநாட்டில் இருந்துதான் பார்த்தார். மேலும், அதிமுக வேட்பாளர் பட்டியலையும் அவர் அங்கு வைத்துத்தான் இறுதி செய்ததாகவும் கூறப்படுகிறது.

மார்ச் 3ம் தேதி தரையிறங்கினார்
இதையடுத்து தேர்தல் பிரசாரத்திற்காக மார்ச் 3ம் தேதி ஜெயலலிதா கொடநாட்டை விட்டு வெளியேரி வந்தார். 40 தொகுதிகளிலும் தீவிரமாகப் பிரசாரம் செய்தார்.

ஏப்ரல் 25 முதல் மீண்டும் அரசுப் பணி
தற்போது தேர்தல் முடிந்து விட்டதைத் தொடர்ந்து ஏப்ரல் 25ம் தேதி முதல் மீண்டும் அரசுப் பணியைப் பார்க்கத் தொடங்கியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா.

கொடநாடு பயணம்
இதையடுத்து சில நாள் ஓய்வுக்காக கொடநாடு புறப்பட்டுள்ளார் ஜெயலலிதா. இன்று முற்பகலில் அவர் சென்னையிலிருந்து புறப்பட்டார்.

தேர்தல் முடிவு வரும் வரை...
அனேகமாக அவர் தேர்தல் முடிவுக்கு சில நாட்கள் முன்புதான் சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
Mukesh Ambani: கோடி கோடியாய் லாபம் வந்தாலும்.. ஒரு ரூபா எடுக்கல.. அம்பானி நிலைமையை பாத்தீங்களா! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications