பரபர போயஸ் தோட்டம்... ஜெ.வுடன் முதல்வர் ஓ.பி.எஸ். உட்பட 19 அமைச்சர்கள் சந்திப்பு!
சென்னை: அண்ணா தி.மு.க. பொதுச்செயலர் ஜெயலலிதாவை தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் 19 அமைச்சர்கள் இன்று போயஸ் தோட்டத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இச்சந்திப்பின் போது முதல்வர் பதவியில் இருந்து பன்னீர்செல்வம் ராஜினாமா செய்வது, எம்.எல்.ஏக்கள் கூட்டம், ஜெயலலிதா பதவியேற்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட நாள் முதல் ஜெயலலிதாவை சந்திக்க அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் நாள்தோறும் போயஸ் தோட்டத்துக்கு சென்று வருகின்றனர். கடந்த சில நாட்களாக ஏராளமான அண்ணா தி.மு.க. தொண்டர்கள் போயஸ் தோட்டத்திலேயே காத்து கிடக்கின்றனர்..

ஆனால் எவரையுமே ஜெயலலிதா சந்திக்கவில்லை என்றும் கூறப்பட்டு வந்தது. இதனை உறுதி செய்யும் வகையில் குறைந்தபட்சம் போயஸ் தோட்டத்து பால்கனியில் நின்று தொண்டர்களைப் பார்த்து கை கூட அசைக்கவில்லை. ஜெயலலிதாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாலேயே யாரையும் அவர் சந்திக்கவில்லை என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில் நேற்று முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை ஜெயலலிதா சந்தித்து பேசினார். அப்போது சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பை எதிர்த்து கர்நாடகா மேல்முறையீடு செய்யுமா? அப்படி செய்தால் மீண்டும் முதல்வராக பதவியேற்பதில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
இதனிடையே சென்னையில் இன்று அண்ணா தி.மு.க. எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறும் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால் மாலை வரை எந்த கூட்டமும் நடைபெறவில்லை.
இந்த சூழ்நிலையில் முதல்வர் பன்னீர்செல்வம் உட்பட 19 அமைச்சர்கள் இன்று மாலை 3 மணியளவில் போயஸ் தோட்டத்துக்கு அடுத்தடுத்து சென்றனர். முதல்வர் பன்னீர்செல்வம் உட்பட அமைச்சர்களுடன் ஜெயலலிதா அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்ததாக தெரிகிறது.
மேலும் பன்னீர்செல்வம் ராஜினாமா செய்வது எப்போது? அண்ணா தி.மு.க. எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை எப்போது நடத்துவது? ஜெயலலிதா முதல்வராக பதவியேற்பது எப்போது?என இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications