ரகுராம் ராஜன் குழு அறிக்கைக்கு ஜெ. எதிர்ப்பு! நிதிக்குழு அமைத்த பின் நிபுணர் குழு ஏன்?
Subscribe to Oneindia Tamil

அந்தக் கடித விவரம்:
மாநிலங்களின் ஒருங்கிணைந்த மேம்பாட்டு குறியீட்டுக்கான டாக்டர் ரகுராம் ராஜன் கமிட்டியின் அறிக்கை கடந்த மாதம் 26-ந் தேதி வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையை நான் மிகவும் கவனமுடன் படித்தேன்.
மத்திய - மாநில நிதி தொடர்புகளில் மத்திய நிதித்துறையின் அணுகுமுறை தவறான வகையில் இருப்பதை அறிந்து கவலை கொண்டேன். மத்திய - மாநில அரசுகள் வளங்களை பங்கீடு செய்வது சட்டப்படி நடந்து வருகிறது.
14-வது நிதிக்குழு ஏற்கனவே அமைக்கப்பட்டுவிட்ட நிலையில் பிறகு நிபுணர் குழுவை அமைப்பதன் மூலம் மத்திய நிதி அமைச்சர், மத்திய அரசிடம் இருந்து மாநிலங்களுக்கு நிதி மாற்றம் செய்வதில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளார்.












Click it and Unblock the Notifications