For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

7 மாதங்களுக்குப் பிறகு வெளியே வரும் ஜெ... மே 22-ல் தலைவர்கள் சிலைக்கு மரியாதை!

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைக்குப் போய் ஜாமீனில் வெளிவந்தது முதல் போயஸ் தோட்டத்தை விட்டு வெளியே வராமல் இருந்த அண்ணா தி.மு.க. பொதுச்செயலர் மே 22-ந் தேதியன்று முதல் முறையாக பொதுநிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். அன்றைய தினம் தலைவர்கள் சிலைக்கு ஜெயலலிதா மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார்.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ந் தேதியன்று ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனையை விதித்தது பெங்களூரு சிறப்பு நீதிமன்றம். இதனைத் தொடர்ந்து பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார் ஜெயலலிதா.

Jaya to pay floral tributes to Dravidian leaders

21 நாட்கள் சிறையில் இருந்த ஜெயலலிதா பின்னர் ஜாமீனில் வெளிவந்தார். ஜாமீனில் விடுதலையாகி சென்னை வந்த பின்னர் கடந்த 7 மாதங்களாக போயஸ் தோட்டத்து வீட்டை விட்டு அவர் வெளியேறியதே இல்லை.

அண்மையில் சொத்து குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்ட பின்னர்தான் போயஸ் தோட்டத்தில் கடந்த சில நாட்களாக முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோரையும் ஜெயலலித நேரில் சந்தித்து பேசி வருகிறார்.

ஜெயலலிதாவை விடுதலை செய்து நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதால் அவர் மீண்டும் தமிழக முதல்வராக பதவியேற்க இருக்கிறார். இதன் முதல் கட்டமாக மே 22-ந் தேதியன்று காலை 7 மணிக்கு அண்ணா தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் அண்ணா தி.மு.க. சட்டசபை கட்சித் தலைவராக ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார். இதன் பின்னர் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க ஜெயலலிதா உரிமை கோருகிறார். மே 22-ந் தேதியன்றே ஜெயலலிதா பதவியேற்பாரா? அல்லது மே 23-ந் தேதி பதவியேற்பாரா என்பது இன்னமும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில் அண்ணா தி.மு.க தலைமைக் கழகம் இன்று வெளியிட்ட அறிக்கையில், மே 22-ந் தேதியன்று பகல் 2 மணியளவில் சென்னையில் பெரியார், அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு ஜெயலலிதா மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது மே 22-ந் தேதி காலை எம்.எல்.ஏக்கள் கூட்டம் முடிந்த கையோடு முதல்வராக பதவியேற்ற பின்னர் தலைவர் சிலைகளுக்கு ஜெயலலிதா மலர் தூவி மரியாதை செலுத்துகிறாரா? அல்லது மே 23-ந் தேதி பதவியேற்பதை ஒட்டி முன்னதாக தலைவர்கள் சிலைக்கு அவர் மரியாதை செலுத்துகிறாரா என்பது தெரிவிக்கப்படவில்லை.

English summary
AIADMK General Secretary Jayalalithaa to pay floral tributes to statues of Periyar, Anna and MGR on May 22.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X