அப்பல்லோவில் ராகுகால பூஜை செய்தாரா ஜெ?
சென்னை: உடல்நலக்குறைவினால் அப்பல்லோ மருத்துவமனையில் ஓய்வு எடுத்து வரும் முதல்வர் ஜெயலலிதா ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணியில் இருந்து 6 மணி வரை ராகு காலத்தில் துர்க்கா பூஜை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால் உடனடியாக அதிமுக தேர்தல் பணிக்குழுவினரை பணிகளைத் தொடங்குமாறு உத்தரவிட்டுள்ளாராம்.
ராகுகாலத்தில் நல்ல செயல்களை தொடங்குவது நல்லதல்ல என்று பொதுவாக கூறினாலும் ராகு காலத்தில் அம்மனை வணங்குவது சிறப்பான பலன்களை தரும் என்பது ஆன்மிகத்தை முழுமையாக அறிந்தவர்களுக்கு தெரியும்.
செவ்வாய், வெள்ளி, ஞாயிறன்று ராகு காலத்தில் செய்யப்படும் தேவி வழிபாடு என்பது சிறந்த பலன்களை அள்ளித்தரும் என்று ஜோதிடர்கள் சொல்கிறார்கள்.

நோய் தீர்க்கும் வழிபாடு
ஞாயிற்றுக்கிழமை துர்க்கை வழிபாடு தீராத நோய்களின் தாக்கத்தைக் குறைக்கும் என்கிறார்கள் ஜோதிடர்கள் எனவேதான் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணியில் இருந்து 6 மணி வரை ராகு காலத்தில் துர்க்கை படத்தை வைத்து அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா பூஜை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

மந்திரம் உச்சரித்து பூஜை
சமஸ்கிருதத்தில் துர்க்கை மந்திரம் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மனப்பாடமாக தெரியுமாம். அந்த மந்திரத்தையே ஒன்றரை மணிநேரம் திரும்பத் திரும்ப சொன்னபடி இருந்திருக்கிறார். பூஜை முடியும் வரை சசிகலாவும், இளவரசியும் எதுவும் பேசாமல் ஜெயலலிதாவுக்கு எதிரே அமைதியாக அமர்ந்திருந்தார்களாம்.

செய்தியாளர்கள் சந்திப்பு
ராகு காலம் முடிந்த பிறகுதான் அப்பல்லோ மருத்துவர்களை தன் உடல்நிலை குறித்த விளக்கங்களை மீடியாவுக்கு சொல்லச் சொல்லியிருக்கிறார். அப்பல்லோ மருத்துவர்கள் தயார் செய்து வைத்திருந்த பிரஸ் ரிலீஸை படித்துப் பார்த்து சில திருத்தங்களைச் சொல்லியிருக்கிறார். குறிப்பாக, ‘வெளிநாடு செல்ல வேண்டிய அவசியம் இல்லை' என்ற வார்த்தையைச் சேர்க்கச் சொன்னது முதல்வர்தான் என்கிறார்கள்.

உள்ளாட்சித்தேர்தல்
ராகுகாலம் முடிந்து மாலை 6.15 மணிக்கு தேர்தல் ஆணையர் உள்ளாட்சித் தேர்தல் தேதியை அறிவிக்க பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார். தேர்தல் தேதி அறிவிப்பு வந்ததை முதல்வர் டிவியில் பார்த்திருக்கிறார். அதற்குப் பிறகுதான், ‘டாக்டர்ஸ் ஊடகங்களுக்கு தகவல் சொல்லச் சொல்லிடுங்க...' என்று சொன்னாராம்.

டாக்டர்கள் அறிவிப்பு
உள்ளாட்சித் தேர்தல் தேதி பற்றிய அறிவிப்பு வந்த அடுத்த 20 நிமிடங்களில் அப்பல்லோ மருத்துவர்கள் முதல்வரின் உடல்நிலை குறித்து மீடியாவிடம் விளக்கினார்கள். அது ஜெயா பிளஸ் டிவியில் மட்டும் லைவ் ஆக ஒளிபரப்பப்பட்டது. அதையும் முதல்வர் மருத்துவமனையில் இருந்து பார்த்திருக்கிறார்.

ஜெயலலிதா ஆலோசனை
ஜெயலலிதா மருத்துவமனையிலேயே இருந்தாலும், உள்ளாட்சி தேர்தலுக்கான வேலைகள் விறுவிறுவென தொடங்கிவிட்டது அதிமுக. ஞாயிறு இரவு அப்போது சில விஷயங்களை சசிகலாவிடம் பேசியிருக்கிறார். இரவு உணவாக முதல்வருக்கு ஒரு இட்லியும், கஞ்சியும் வழங்கப்பட்டு இருக்கிறது. அதை சாப்பிட்டுவிட்டு சில ஆலோசனைகளை சொன்னாராம் முதல்வர்.

உடனே ஆரம்பிங்க
உள்ளாட்சித் தேர்தல் நெருக்கத்தில் வந்துடுச்சு. வேலைகளை சீக்கிரம் ஆரம்பிக்கணும். நாட்கள் குறைவாகத்தான் இருக்குது. உள்ளாட்சித் தேர்தல் கண்காணிப்புக் குழுவை உடனடியாக வேலைகளைத் தொடங்கச் சொல்லுங்க. நான் டிஸ்சார்ஜ் ஆகும் வரைக்கும் வெயிட் பண்ண வேண்டாம்.

நாமதான் ஜெயிப்போம்
தலைவர்களைத் தேர்ந்தெடுக்க நேரம் இருப்பதால், அதுபற்றி நான் டிஸ்சார்ஜ் ஆன பிறகு பேசிக்கலாம். மற்ற வேலைகளை உடனடியாகத் தொடங்கி ஆகணும் என்று சசிகலாவிடம் சொல்லியிருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா. நீங்க எதுக்கும் கவலைப்படாமல் ரெஸ்ட் எடுங்க. எந்த சிக்கலும் வராமல் நாங்க பார்த்துக்குறோம்... நாமதான் ஜெயிப்போம் என்று சசிகலா ஆறுதல் சொல்லியிருக்கிறார். அம்மா மருத்துவமனையில் இருந்தாலும் ஜரூராக பணிகளை தொடங்கிவிட்டது அதிமுக என்கின்றனர் அக்கட்சியின் முக்கிய பிரதிநிதிகள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications