சரத்குமாருக்கு ஒரு சீட்தானாம்.. ஆனால் அது அவருக்கு இல்லையாம்.. நிஜமா??
சென்னை: அதிமுக கூட்டணியில் மீண்டும் இணைந்துள்ள அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமாருக்கு தேர்தலில் சீட் தரப்படாது என்றும் பிரசார பீரங்கியாக அவரை பயன்படுத்திக் கொள்ள ஜெயலலிதா திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
கடந்த சட்டசபைத் தேர்தலி்ன்போது ஒருங்கிணைந்த சமத்துவ மக்கள் கட்சிக்கு 2 சீட்டுகள் கொடுத்தார் ஜெயலலிதா. அதில் ஒரு தொகுதியில் சரத்குமாரும், இன்னொன்றில் எர்ணாவூர் நாராயணனும் போட்டியிட்டு வென்றனர். இருவரும் இரட்டை இலையில் போட்டியிட்டனர். தற்போது இக்கட்சி உடைந்து விட்டது.

எர்ணாவூர் நாராயணன் தனிக் கட்சி தொடங்கி முதல் ஆளாக ஜெயலலிதாவைப் பார்த்து கூட்டணியில் சேர்ந்தார். ஆனால் அதிமுக கூட்டணியிலிருந்து விலகி பாஜக கூட்டணிக்குப் போனார் சரத்குமார்.
ஆனால் யாரும் எதிர்பாராதா வகையில் அவரை ஜெயலலிதா திடீரென அழைக்க அதிர்ச்சி கலந்த மகிழ்ச்சியுடன் போயஸ் தோட்டத்துக்கு ஓடினார் சரத்குமார். அங்கு ஜெயலலிதாவைப் பார்த்து அதிமுக கூட்டணியில் இணைந்தார். ஜெயலலிதாவைச் சந்தித்தபோது அவருக்கு ஷாக் தரும் செய்தியை ஜெயலலிதா கொடுத்ததாக ஒரு தகவல் உலா வருகிறது.
ஒரு சீட் தருகிறோம். ஆனால் அதில் நீங்கள் போட்டியிடக் கூடாது. நீங்கள் முழுமையாக பிரசாரத்திற்கு மட்டும் போக வேண்டும் என்று போயஸ் கார்டனில் சரத்குமாருக்குக் கூறப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எம்.பி சீட் தரத் திட்டமோ?
இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஒரு வேளை தேர்தலுக்குப் பிறகு சரத்குமாருக்கு ராஜ்யசபா எம்.பி. பதவியைத் தர ஜெயலலிதா திட்டமிட்டிருக்கிறாரோ என்னவோ தெரியவில்லை. ஒரு வேளை மேலே சொன்னது உண்மையாக இருக்கும் பட்சத்தில் அதில் யாரை அவர் நிறுத்துவார் என்பது எதிர்பார்ப்புக்குரியதாகியுள்ளது. தனது மனைவி ராதிகாவுக்கு அந்த சீட்டைக் கொடுத்து நிறுத்த வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications