ஜெ. கேபினட்டில் யார் சீனியர்? ஜூனியர்? - லிஸ்ட் வெளியிட்டது தமிழக அரசு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் 2வது இடத்தை 'தொடர்ந்து' ஒ. பன்னீர்செல்வம் தக்கவைத்துக் கொண்டிருக்கிறார். இந்த அமைச்சரவையில் ஜூனியர் அமைச்சராக இருப்பவர் டாக்டர் விஜயபாஸ்கர்.

Jaya's Ministers list with seniority

தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் நேற்று வெளியிட்ட தமிழக அமைச்சரவைப் பட்டியல்:

1. ஜெயலலிதா முதல்வர் - பொது, இந்திய ஆட்சிப்பணி, இந்தியக் காவல் பணி, இந்திய வனப்பணி, பொது நிர்வாகம், மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல் மற்றும் உள்துறை.

2. ஒ. பன்னீர்செல்வம் - நிதித்துறை, பொதுப்பணித்துறை அமைச்சர்.

3. நத்தம் ஆர்.விஸ்வநாதன்- மின்சாரத்துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்.

4. ஆர்.வைத்திலிங்கம் - வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறை, வேளாண்மைத்துறை அமைச்சர்.

5. எடப்பாடி கே.பழனிச்சாமி - நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள் துறை, வனத்துறை அமைச்சர்.

6. பி.மோகன் - ஊரகத் தொழில் துறை, தொழிலாளர் நலத்துறை அமைச்சர்.

7. பி.வளர்மதி - சமூக நலம், சத்துணவுத் திட்டத் துறை அமைச்சர்.

8. பி.பழனியப்பன் - உயர் கல்வித்துறை அமைச்சர்.

9. செல்லூர் கே.ராஜூ - கூட்டுறவுத்துறை அமைச்சர்.

10. ஆர்.காமராஜ் - உணவுத் துறை, இந்து சமயம், அறநிலையத்துறை அமைச்சர்.

11. பி.தங்கமணி - தொழில் துறை அமைச்சர்.

12. வி.செந்தில் பாலாஜி - போக்குவரத்துத்துறை அமைச்சர்.

13. எம்.சி.சம்பத் - வணிகவரி, பதிவுத்துறை அமைச்சர்.

14. எஸ்.பி.வேலுமணி - நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித் துறை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள் துறை அமைச்சர்.

15. டி.கே.எம். சின்னய்யா - கால்நடைப் பராமரிப்புத்துறை அமைச்சர்.

16. எஸ்.கோகுல இந்திரா - கைத்தறி, துணிநூல் துறை அமைச்சர்.

17. எஸ்.சுந்தரராஜ் - இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்.

18. எஸ்.பி.சண்முகநாதன் - சுற்றுலாத்துறை அமைச்சர்.

19. என்.சுப்ரமணியன் - ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர்.

20. கே.ஏ.ஜெயபால் - மீன்வளத்துறை அமைச்சர்.

21. முக்கூர் என்.சுப்ரமணியன் - தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர்.

22. ஆர்.பி.உதயகுமார் - வருவாய்த்துறை அமைச்சர்.

23. கே.டி.ராஜேந்திர பாலாஜி - செய்தி, சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர்.

24. பி.வி.ரமணா - பால்வளத்துறை அமைச்சர்.

25. கே.சி.வீரமணி - பள்ளிக்கல்வி துறை அமைச்சர்.

26. தோப்பு என்.டி.வெங்கடாசலம் - சுற்றுச்சுழல் துறை அமைச்சர்.

27. டி.பி.பூனாச்சி - கதர், கிராம தொழில் வாரிய துறை அமைச்சர்.

28. எஸ்.அப்துல் ரஹீம் - பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர்.

29. டாக்டர்.சி. விஜயபாஸ்கர் - மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+