மெரீனாவில் படுத்துறங்கி.. ஜெ. பதவியேற்பைப் பார்த்து மகிழ்ந்து பொட்டியைக் கட்டிய அதிமுகவினர்!
சென்னை: ஜெயலலிதா முதல்வர் பதவியேற்பதைக் காண நேற்று சென்னைக்கு வந்து குவிந்து விட்ட ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் மெரீனா கடற்கரையை தற்காலிக இருப்பிடமாக மாற்று நேற்று இரவு முழுவதும் அங்கேயே தங்கியிருந்து இன்று காலை ஜெயலலிதா பதவியேற்பை ராட்சத டிவி மூலம் கண்டு களித்து மகிழ்ந்து சொந்த ஊர்களுக்குத் திரும்ப ஆரம்பித்துள்ளனர்.
கிராமங்களில் திருவிழா நடந்தால் குடும்பம் குடும்பாக சாப்பாடு கட்டிக் கொண்டு மாட்டு வண்டிகளில் ஏறி மக்கள் படையெடுப்பார்கள். அதேபோல ஜெயலலிதாவைக் காண நேற்று தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்தும் அதிமுகவினர் பஸ்கள், வேன்கள், கார்களில் சென்னைக்குக் கிளம்பி வந்து விட்டனர். இதனால் சென்னையே திமிலோகப்பட்டுப்போனது.

எங்கு பார்த்தாலும் அதிமுகவினர் தலையாக காணப்பட்டது. ஜெயலலிதாவின் வீட்டிலிருந்து அவர் நேற்று சென்ற பாதையெங்கும் தொண்டர்கள் இரு மருங்கிலும் கடலென திரண்டிருந்தனர்.
சென்னைக்கு நேற்று வந்த பெரும்பாலான வெளியூர்க்காரர்கள் மெரீனா கடற்கரை உள்ளிட்ட பகுதிகளை தற்காலிக ஜாகையாக மாற்றி விட்டனர். இரவு முழுவதும் அங்கேயே படுத்துத் துங்கிய அவர்கள் காலையில் கடலில் குளியல் போட்டு விட்டு ஜெயலலிதாவைக் காண திரண்டு வந்து விட்டனர். கடற்கரை காமராஜர் சாலை, பதவியேற்பு விழா நடந்த சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபம் ஆகிய இடங்களில் அவர்கள் குழுமியிருந்தனர்.
பதவியேற்பு விழாவைக் கண்டு களிப்பதற்காக பெரிய பெரிய டிவி திரைகளும் அமைக்கப்பட்டு அதில் பதவியேற்பு விழா ஒளிபரப்பப்பட்டது. 2 பெரிய திரைகளில் பதவியேற்பு விழா ஒளிபரப்பப்பட்டது.
-
அஸைன்மென்டுடன் இறங்கிய செங்க்ஸ், ஆதவ்.. ஆல் அவுட் ஆகும் அதிமுக.. அடுத்த விக்கெட் யார்? -
இடைத்தேர்தலில் மீண்டும் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? மரகதம் குமரவேல் ரியாக்ஷன் என்ன? -
எடப்பாடி செய்த அந்த 3 தவறுகள்.. "முக்குலத்தோர் கோபம்.." உடைந்து சிதற போகுது கட்சி? அடுத்து என்ன -
திமுகவுடன் குதிரை பேரம் நடத்தியது யார்?.. எடப்பாடிக்கு செங்கோட்டையன் அடுக்கடுக்கான கேள்வி! -
லேட் ஆகுது மதுரவாயல் பாலம்.. முடங்கும் கார் ஏற்றுமதி! சென்னை போர்ட்டில் நடப்பது என்ன? எக்ஸ்க்ளூசிவ் -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன?












Click it and Unblock the Notifications