எம்.எல்.ஏ.வாக பதவியேற்றார் முதல்வர் ஜெயலலிதா! சபாநாயகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்
சென்னை: ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதா இன்று எம்.எல்.ஏ.ஆக பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு சபாநாயகர் தனபால் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
ஆர்.கே.நகர் தொகுதியின் எம்.எல்.ஏ. வெற்றிவேல் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அந்தத் தொகுதியில் இடைத் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் முதல்வர் ஜெயலலிதா போட்டியிட்டார்.

கடந்த ஜூன் 27ம் தேதி இடைத் தேர்தல் வாக்குப்பதிவு நடந்தது. 30ம் தேதி ஓட்டு எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளியாகின. அதில் முதல்வர் ஜெயலலிதா ஒன்றரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அன்றே அவர் எம்.எல்.ஏ.ஆக பதவி ஏற்பார் என்று கூறப்பட்ட நிலையில் திடீரென பதவியேற்பு தள்ளிப்போனது.
இந்த நிலையில் எம்.எல்.ஏ.ஆக முதல்வர் ஜெயலலிதா இன்று பதவி ஏற்பதாக அறிவிக்கப்பட்டது. இதற்காக காலை 11 மணிக்கு அவர் தலைமைச் செயலகத்திலுள்ள சபாநாயகர் அறைக்கு வந்தார். சபாநாயகர் தனபால் முன்னிலையில் ஜெயலலிதா பதவி பிரமாணம் படித்து எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்றார்.
ஐந்தாவது முறையாக முதல்வராக பதவியேற்றுள்ள ஜெயலலிதா, தற்போது 6வது முறையாக சட்டசபை உறுப்பினராகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications