தேர்தலில் வென்றதற்கு கருணாநிதிக்கு தான் ஜெ. நன்றி சொல்லனும்: சு. சாமி
நாகர்கோவில்: தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றுள்ளதற்கு ஜெயலலிதா கருணாநிதிக்கு தான் நன்றி தெரிவிக்க வேண்டும் என பாஜக தலைவர் சுப்பிரணியன் சாமி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி தோல்வி அடைய திமுக தலைவர் கருணாநிதி தான் காரணம் என பாஜக மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்.பி.யுமான சுப்பிரமணியன் சாமி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அவர் கருணாநிதி பற்றி மீண்டும் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

அதிமுக
தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றுள்ளதற்கு ஜெயலலிதா கருணாநிதிக்கு தான் நன்றி தெரிவிக்க வேண்டும். அவர் காங்கிரஸுடன் கூட்டணி வைத்ததாலேயே திமுக தோல்வி அடைந்தது.

கருணாநிதி
திமுக பல்வேறு தொகுதிகளில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தான் தோல்வி அடைந்துள்ளது. கருணாநிதி அரசியலில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டு சினிமா படங்களுக்கு கதை, வசனம் எழுதலாம்.

தேமுதிக
பாஜக, திமுக, தேமுதிகவை இணைத்து ஒரு கூட்டணி அமைக்க முயற்சித்தோம். ஆனால் திமுக காங்கிரஸை கூட்டணிக்கு சேர்த்ததால் அந்த முயற்சியை கைவிட்டோம். புதிய அதிமுக அரசு எதையும் பெரிதாக சாதிக்கப் போவது இல்லை.

ஜெயலலிதா
500 டாஸ்மாக் கடைகளை மூடுவது ஏமாற்று வேலை. ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் உயர் நீதிமன்றத்திலேயே அவருக்கு சாதகமான சூழல் இல்லை. ரூ. 55 கோடியை ரூ.3 கோடியாக குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதாவுக்கு தண்டனை கிடைப்பது உறுதி.

தில்லுமுல்லு
அதிமுக தில்லுமுல்லு செய்து வெற்றி பெற்றுவிட்டது என்று கருணாநிதி தெரிவித்துள்ளார். கருணாநிதி செய்த தில்லுமுல்லு அனைவருக்கும் தெரியும். நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்த பா.சிதம்பரத்தை வெற்றி பெற்றதாக அறிவிக்கும்படி செய்தார். சென்னை மாநகராட்சி தேர்தலில் சந்திரலேகாவை தோற்கடித்தார்.

தனித்து போட்டி
அடுத்த தேர்தலில் தமிழகத்தில் தனித்து போட்டியிடுமாறு பாஜக தலைமையை வலியுறுத்துவேன். இதை கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் தெரிவிப்பேன். ஹெலிகாப்டர் பேர ஊழலில் சோனியா காந்தி, அகமது பட்டேல், ஆஸ்கர் பெர்னாண்டஸ் ஆகியோருக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும்.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications