காயிதே மில்லத் பிறந்தநாளை புறக்கணித்தார் முதல்வர் ஜெயலலிதா!
சென்னை: காயிதே மில்லத் 119வது பிறந்த நாள் விழாவை தமிழக முதல்வர் ஜெயலலிதா புறக்கணித்துள்ளார்.
காயிதே மில்லத் 119வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. திருவல்லிக்கேணி வாலாஜா பெரிய பள்ளி வாசல் வளாகத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் அரசியல் கட்சியினர், சமுதாய பிரமுகர்கள் பலர் திரண்டு வந்து மலர் போர்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

ஆனால், தமிழக முதல்வர் ஜெயலலிதா புறக்கணித்துவிட்டார். ஒருவாரத்திற்கு முன்பே தமிழக செய்தி மக்கள் தொடர்புத்துறை அதிகாரிகளை முதல்வர் அலுவலகம் தொடர்பு கொண்டு, காயிதே மில்லத் பிறந்தநாளுக்கு முதல்வர் மரியாதை செலுத்தப்போகிறார். அதற்கான தயாரிப்பு வேலைகளை செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஆனால் திடீரெனகாயிதே மில்லத் பிறந்த நாளை முன்னிட்டு அவரது நினைவு இடத்தில் மரியாதை செலுத்துவதை முதல்வர் ஜெயலலிதா தவிர்த்துவிட்டார்.












Click it and Unblock the Notifications