For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அதிமுகவின் ஐடி பிரிவுக்கும் 50 மாவட்ட செயலாளர்களை நிர்வாகிகளை நியமித்த ஜெ.

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கும் வேளையில் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளை நியமித்து அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு கூடுதல் நிர்வாகிகளாகவும், அதிமுக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் 50 மாவட்டங்களின் நிர்வாகிகள் நியமிக்கப்படுகிறார்கள்.

Jaya strengthens ADMK IT wing ahead of election

அவர்களின் விவரம் வருமாறு:-

அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர்கள்- பி.கார்த்தியாயினி (வேலூர் மாநகராட்சி மேயர்), வி.வி.ஆர்.ராஜ் சத்யன், எம்.சத்யன் சுந்தரராஜன்.

வடசென்னை வடக்கு மாவட்ட தலைவர் ஏ.சசிரேகா, வடசென்னை தெற்கு மாவட்ட தலைவர் ஜெ.பிரபு சங்கர், செயலாளர் எஸ்.சந்துரு, தென்சென்னை வடக்கு மாவட்ட தலைவர் பி.எஸ்.முத்துகுமார், செயலாளர் ஜெ.சசிகுமார், தென்சென்னை தெற்கு மாவட்ட தலைவர் பாக்யலட்சுமி, செயலாளர் வி.பி.ராகவேந்திர ராவ் (எ) ராயல் ராஜா,

காஞ்சீபுரம் கிழக்கு மாவட்ட தலைவர் என்.ராஜராஜன், செயலாளர் கே.பிரவின்குமார், காஞ்சீபுரம் மத்திய மாவட்ட தலைவர் கண்ணதாசன், செயலாளர் ஆர்.தீனதயாளன், காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட தலைவர் ஆர்.தமிழரசன், செயலாளர் ஜி.புகழேந்தி,

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தலைவர் சி.பத்மநாபன், செயலாளர் எஸ்.பாலாஜி, திருவள்ளூர் மேற்கு மாவட்ட தலைவர் ஜே.நிர்மல் குமார், செயலாளர் சரவணன் கஜேந்திரன், இவர்கள் தவிர அந்தந்த மாவட்டத்துக்கு துணைத் தலைவர், இணைச் செயலாளர்கள், துணைச் செயலாளர்கள், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்கும் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

அ.தி.மு.க. தொண்டர்கள் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

English summary
ADMK chief cum CM Jayalalithaa has appointed functionaries for the party's IT wing ahead of the TN aseembly election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X