"மக்களின் முதல்வர்".... ஜெயலலிதாவுக்குப் புதுப் பட்டம்... கொடுத்தது ஜெயா டிவி!
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவிடமிருந்து முதல்வர் பதவி போய் விட்டாலும் கூட ஜெயா டிவியைப் பொறுத்தவரை இன்னும் அவர்களுக்கு முதல்வராகவே தெரிகிறார் போலும். ஆனால் நேரடியாக முதல்வர் என்று கூற முடியாதே என்பதால் மக்கள் முதல்வர் என்ற புதுப் பெயரைச் சூட்டி அதை வைத்து அழைக்க ஆரம்பித்துள்ளனர்.
ஜெயா டிவியின் செய்திகளிலும், ஜெயா பிளஸ் சானல் செய்திகளிலும் மக்கள் முதல்வர், மக்கள் முதல்வர் என்றே அழைக்க ஆரம்பித்துள்ளனர் ஜெயலலலிதா.
அதிலும் ஜெயா பிளஸ் சானலில் முழுக்க முழுக்க ஜெயலலிதா குறித்த செய்திகள் மட்டுமே. வேறு செய்திகளுக்கு அங்கு இடமே இல்லை.

சிறையில் ஜெயலலிதா
பெங்களூர் சிறையில் ஜெயலலிதாவை அடைத்து இன்றோடு நான்கு நாட்களாகின்றன. இன்னும் ஜெயா பிளஸ் செய்தி சேனலில் ஜெயலலிதா குறித்த செய்திகள் மட்டுமே ஓடிக் கொண்டிருக்கிறது.

அதிமுகவினரின் போராட்டங்கள்
அதிமுகவினர் நடத்தி வரும் போராட்டங்கள் உள்ளிட்டவற்றைத் திரும்பத் திரும்பக் காட்டி வருகின்றனர்.

எப்போது ஆன் செய்தாலும் ஏதாவது ஒரு அழுகை
எப்போது சானலை ஆன் செய்தாலும் யாராவது ஒருவர் அழுதபடி இருக்கிறார். குறிப்பாக பெண்களின் அழுகையைத்தான் அதிகம் காட்டுகின்றனர்.

தாயில்லாப் பிள்ளையாகிட்டோமே...
அதிலும் பல பெண்கள், நாங்கள் இப்போது தாயில்லாப் பிள்ளையாகிட்டோமே, அனாதையாகிட்டோமே என்றெல்லாம் அழுவதைப் பார்த்தபோது.. பார்க்கவே பாவமாக இருந்தது!.

மக்கள் முதல்வர்
ஜெயலலிதாவை எப்படிக் கூப்பிடுவது என்பதில் ஜெயா டிவி டெஸ்க்கில் பெரும் குழப்பம் ஏற்பட்டிருக்கும்போலும். உட்கார்ந்து டிஸ்கஸ் செய்து புதுப் பெயரை உருவாக்கி விட்டார்கள். அந்தப் பெயர்தான் மக்கள் முதல்வர்.

மக்களின் ஜனாதிபதி போல..
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை இப்படித்தான் எல்லோரும் மக்களின் ஜனாதிபதி என்று அழைத்தனர். அந்த பாணியில் ஜெயலலிதாவுக்கும் மக்களின் முதல்வர் என்று பெயர் சூட்டியுள்ளது ஜெயா டிவி.

ஜனங்களின் கலைஞன் போல..
அதேபோல நகைச்சுவை நடிகர் விவேக்கையும் கூட ஜனங்களின் கலைஞன் என்று கூப்பிடுவது வழக்கம். அந்த வரிசையில் தற்போது ஜெயலலிதாவும் இணைந்துள்ளார்.

டிராபிக் ராமசாமி கேஸ் போடாமல் இருக்க வேண்டுமே...
ஆனால் முதல்வர் என்ற வார்த்தையைப் பயன்படுத்தக் கூடாது என்று கூறி டிராபிக் ராமசாமி போன்றோர் கேஸ் போடாமல் இருக்க வேண்டுமே...!
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications