வளைக்கப்படுகிறது விவேக் குடும்பம் ? : சகோதரி ஷகீலாவும் வருமானவரித்துறை முன் ஆஜர்
மிடாஸ் மதுபான ஆலை முக்கிய நிர்வாகி ஷகீலாவும் வருமானவரித்துறை அலுவலகத்தில் ஆஜரானார்.
சென்னை : ஜெயா டி.வி சி.இ.ஓ விவேக் ஜெயராமனின் இன்னொரு சகோதரியான ஷகீலாவும் வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராகி உள்ளார்.
கடந்த வியாழக்கிழமை சென்னை உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள சசிகலா மற்றும் தினகரன் உறவினர்கள், நண்பர்கள், ஆதரவாளர்களுக்குச் சொந்தமான வீடு, அலுவலகங்கள் என 187 இடங்களில் 1800க்கும் அதிகமான வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இதனால் தமிழகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

பல இடங்களில் சோதனை ஓரிரு நாட்களில் முடிவடைந்துவிட்ட நிலையில், இளவரசியின் மகன் விவேக் ஜெயராமன் முக்கியப் பங்கு வகிக்கும் ஜாஸ் சினிமாஸ் அலுவலகம், ஜெயா டிவி அலுவலகம், விவேக்கின் மூத்த சகோதரியான கிருஷ்ணப்பிரியாவின் தி.நகர் வீடு, அவர் நடத்தி வரும் தொண்டு நிறுவனம், விவேக்கின் இன்னொரு சகோதரியான ஷகீலா முக்கிய நிர்வாகியாக இருக்கும் மிடாஸ் மதுபான ஆலை ஆகியவற்றில் ஐந்து நாட்கள் சோதனை நடந்தது.
இந்தச் சோதனையில் பல முக்கிய ஆவணங்கள், கணக்கில் வராத பல நிறுவனங்கள், வெளிநாட்டு முதலீடுகள் என பலவற்றை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் வருமான வரித்துறை அலுவலகம் அழைத்துச் செல்லப்பட்டு நீண்ட விசாரணைக்குப் பின் விவேக் திருப்பி அனுப்பப்பட்டார்.
இன்று விவேக் ஜெயராமனின் சகோதரிகளான கிருஷ்ணப்பிரியா மற்றும் ஷகீலா ஆகியோர் சென்னை வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராகி உள்ளனர். இதில் ஷகீலா மற்றும் அவரது கணவர் ஆகியோர் தான் மிடாஸ் மதுபான ஆலையை நிர்வகித்து வருகிறார்கள்.
அதிமுக அணிகள் பிரிவுக்கு முன்பு வரை இந்த நிறுவனத்தில் தான் டாஸ்மாக்கிற்கான சரக்குகள் அதிக அளவில் கொள்முதல் செய்யப்பட்டன. கோடிக்கணக்கான பணம் புழங்கும் மிடாஸ் நிறுவனத்தில் நடத்தப்பட்ட சோதனையில் பல ஆவணங்கள் சிக்கி இருக்கின்றன. இதுகுறித்து அதிகாரிகள் இன்று ஷகீலாவிடம் விசாரிக்க இருக்கிறார்கள்.
சசிகலா குடும்பத்தின் பல்வேறு முக்கியத் தலைகளின் இடங்களில் ரெய்டு நடந்தாலும், குறிப்பாக விவேக், அவரது சகோதரிகள் கிருஷ்ணப்பிரியா மற்றும் ஷகீலா மீது வருமான வரித்துறையினரின் கை ஓங்கி இருப்பது, ஐ.டி.,யின் முக்கியக்குறி இவர்கள் மூவர் தானோ என்கிற சந்தேகத்தை கிளப்பி உள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications