இவரா உங்கள் முதல்வர் வேட்பாளர்.. விஜயகாந்த்தை கழுவி ஊற்றும் ஜெயா டிவி!
சென்னை: தேமுதிகவின் முதல்வர் வேட்பாளர் விஜயகாந்த்தை ஜெயா டிவியில் கிண்டலடித்தும், நக்கலடித்தும் ஒரு வீடியோவை உலா விட்டுள்ளனர். இவரா உங்கள் முதலமைச்சர் வேட்பாளர் என்ற பெயரில் வரும் அந்த வீடியோ காட்சியில் விஜயகாந்த் பொது இடங்களில் நடந்து கொண்ட கோமாளித்தனங்களைத் தொகுத்துக் கொடுத்துள்ளனர்.
தானாக சிரிப்பது, தள்ளாடியபடி நடப்பது, திடீரென முறைப்பது, அறிவு இருக்காடா உங்களுக்கு என்று தொண்டர்களைப் பார்த்துத் திட்டுவது, பாடிகார்டை முதுகில் குத்துவது, துண்டு போட வந்தவரை அந்தத் துண்டாலேயே அடிப்பது, திடீரென நாக்கைத் துருத்துவது, வரவேற்க வருபவரை பார்த்து முறைப்பது, அவரைத் தாங்கிப் பிடித்தபடி வரும் கட்சியினர் என பிரச்சாரப் பொதுக்கூட்டங்களில் அவர் செய்த, அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளைத் தொகுத்து இவரா உங்கள முதலமைச்சர் வேட்பாளர் என்று கேட்டுள்ளனர் ஜெயா டிவியினர்.
மேலும் பத்திரிகையாளர்களைப் பார்த்து தூக்கி அடிச்சுருவேன் பார்த்துக்க என்று கத்தியது, சென்னை பிரஸ் மீட்டில் தூ என்று பத்திரிகையாளர்களைப் பார்த்துத் துப்பியது, உளறியபடி பேசியது, பிரச்சாரக் கூட்டங்களில் தப்புத் தப்பாக பேசியது என பலவற்றையும் தொகுத்து கலாய்த்துள்ளனர்.
அவரது கூட்டத்தில் விஜயகாந்த்தைப் போலவே சில தொண்டர்கள் டான்ஸ் ஆடியதையும் இடையில் செருகியுள்ளனர்.
ஒரு காட்சியில் தனது மனைவி பிரேமலதா அருகில் உட்கார்ந்திருக்கும் விஜயகாந்த், அப்படியே தலையை பின்னால் சாய்த்தபடி சிரிப்பது என பல காட்சிகளையும் இதில் சேர்த்து இவரா உங்கள் முதலமைச்சர் வேட்பாளர் என்று கிண்டலடித்துள்ளனர்.
சீன்களைத் தொகுத்து மியூசிக்கையும் கோர்த்து விட்டு, அவர் பேசிய பேச்சையும் சேர்த்து கூடவே வாராரய்யா... வர்றாரு... காமெடி பீஸு வர்றாரு, கண்னில் பட்ட ஆளையெல்லாம் கண்டபடி தாக்குறாரு... தள்ளாடி வர்றாரு... தாக்கு தாக்குனு தாக்குறாரு... உஷாரய்யா உஷாரு.. உளருவாரு உஷாரு என்ற கிண்டலையும் கோர்த்து விட்டுள்ளனர்.
கூடவே என்ன பீலிங்... ஹேய் ஒய் ஆர் யூ கிரையிங்... தம்பி போங்க தம்பி.. போன்ற வடிவேலு வசனத்தையும் ஆங்காங்கே செருகி அழகு பார்த்துள்ளது ஜெயா டிவி.
கடைசியில் கவுண்டமணியின் புகழ் பெற்ற ஐம் ஹேப்பி சிரிப்பை சேர்த்து படத்தை முடித்துள்ளனர்.. இவரா முதலமைச்சர் வேட்பாளரு என்ற கேள்வியுடன்!
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications