தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றார்! 28 அமைச்சர்களும் பதவியேற்றனர்!!
சென்னை: தமிழகத்தின் முதல்வராக ஜெயலலிதா இன்று காலை 11 மணிக்கு பதவியேற்றார். முதல்வர் ஜெயலலிதாவுடன் 28 புதிய அமைச்சர்களும் பதவியேற்றனர்.
சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற எம்.எல்ஏக்கள் கூட்டத்தில் சட்டசபைக் கட்சித் தலைவராக ஜெயலலிதா ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து முதல்வர் பதவியிலிருந்து விலகினார் ஓ.பன்னீர் செல்வம். இதனைத் தொடர்ந்து முதல்வராக பதவியேற்க வருமாறு ஜெயலலிதாவுக்கு ஆளுநர் ரோசய்யா அழைப்பு விடுத்தார்.

அதன்படி நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் ஆளுநரைச் சந்தித்தார் ஜெயலலிதா. அப்போது ஆளுநர் ரோசய்யாவை ஜெயலலிதா சந்தித்து முறைப்படி ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

மேலும் அமைச்சரவைப் பட்டியலையும் அவர் ஆளுநரிடம் கொடுத்தார்.. இதனைத் தொடர்ந்து ஜெயலலிதா பதவியேற்பு மற்றும் அமைச்சர்கள் துறை விவரங்களை ஆளுநர் மாளிகை நேற்று வெளியிட்டது.

ஜெயலலிதாவுக்கு மிகவும் பிடித்தமான சென்னை பல்கலைக் கழகத்தின் நூற்றாண்டு விழா அரங்கில் இன்று காலை 11 மணியளவில் ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் ரோசையா பதவி பிரமாணம் செய்துவைத்தார்.

அவருடன் 28 அமைச்சர்களும் பதவியேற்றனர். அமைச்சர்கள் 14, 14 பேராக ஒரே நேரத்தில் பதவியேற்றனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications