ஜெயக்குமார் சூப்பர் மட்டும் அல்ல டூப்பர் முதல்வராகவும் செயல்படுகிறார்.. ஸ்டாலின் நக்கல்

அமைச்சர் ஜெயக்குமார் சூப்பர் முதல்வராக மட்டுமல்ல டூப்பர் முதல்வராகவும் செயல்படுகிறார் என ஸ்டாலின் நக்கலடித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமைச்சர் ஜெயக்குமார் சூப்பர் முதல்வராக மட்டுமல்ல டூப்பர் முதல்வராகவும் செயல்படுகிறார் என ஸ்டாலின் நக்கலடித்துள்ளார்.

கொளத்தூர் தொகுதியில் அத்தொகுதி எம்எல்ஏவும், எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின்
சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள ஜி.கே.எம்.காலனியில் புதைவட மின்கம்பி அமைக்க வலியுறுத்தி உள்ளதாக தெரிவித்தார்.

Jayakumar acting as super duper CM: Stalin

மாநகராட்சி தொடக்கப்பள்ளி குடிநீர் சுத்திகரிப்பு நிலைய பணியை பார்வையிட்டதாகவும் கூறினார். மேலும் உள்ளாட்சித் தேர்தலை மாநில தேர்தல் ஆணையம் ஓராண்டாக நடத்தாமல் உள்ளது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

சென்னையில் வடகிழக்கு பருவமழையின் போது வெள்ளம் ஏற்படாமல் இருக்க திமுகவினர், தன்னார்வலர்கள் பணிகளில் ஈடுபட வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார். காசிமேடு தடியடி குறித்த அமைச்சர் ஜெயக்குமாரின் புகாருக்கு தான் விளக்கம் தர வேண்டிய அவசியமில்லை என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.

ஜெயக்குமார் சூப்பர் முதல்வராக மட்டுமல்லாமல் டூப்பர் முதல்வராகவும் செயல்படுகிறார் என்றும் ஸ்டாலின் விமர்சித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+