ஜெயக்குமார் மகன் ஜெயவர்த்தனிடம் ரூ. 2.87 கோடி சொத்துதான் இருக்காம்!

ஜெயவர்த்தன், முன்னாள் அமைச்சர், முன்னாள் சபாநாயகர் ஜெயக்குமாரின் மகன் ஆவார். தென் சென்னையில் இவரை நிறுத்தியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா.
இவர் தனது வேட்பு மனுவோடு சொத்து குறித்த விவரத்தையும் இணைத்துள்ளார்.
அதில் உள்ள விவரம்...
ஜெயவர்த்தன் கையிருப்பாக ரூ.2 லட்சம், இந்தியன் வங்கியில் ரூ.31 லட்சத்து 14 ஆயிரத்து 15, ரூ.2லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 100 கிராம் தங்கம் என ரூ.35 லட்சத்து 64 ஆயிரத்து 15 உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அசையா சொத்தாக ரூ.2 கோடியே 51 லட்சத்து 39 ஆயிரத்து 100 மதிப்புள்ள நிலங்கள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். ஆக மொத்தம் ஜெயவர்த்தன் சொத்து மதிப்பு ரூ.2 கோடியே 87 லட்சத்து 3 ஆயிரத்து 115.
ஜெயவர்தன் மனைவியின் கையிருப்பாக ரூ.3 லட்சத்து 50 ஆயிரம், யூகோ வங்கியில் ரூ.29,433, ஹெச்டிஎப்சி வங்கியில் ரூ.1,898, யூகோ வங்கியில் நடப்பு கணக்கில் ரூ.99 ஆயிரத்து 938, எல்ஐசி பாலிசி ரூ.2 லட்சத்து 94 ஆயிரத்து 688, ரூ.22 லட்சத்து 80 ஆயிரம் மதிப்புள்ள சொகுசு கார், ரூ.22 லட்சத்து 80 ஆயிரம் மதிப்புள்ள 912 கிராம் தங்க நகைகள் என மொத்தம் ரூ.52 லட்சத்து 55 ஆயிரத்து 957 உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications