EXCLUSIVE: இப்போது பேசும் திமுக 17 வருடமாக எங்கே போனது.. ஜெயக்குமார் பொளேர்
7 பேரை தமிழக அரசு நிச்சயம் விடுவிக்கும் என்று ஜெயக்குமார் கூறியுள்ளார்.
Recommended Video

சென்னை : இப்போது 7 பேர் விடுதலை குறித்து பேசும் திமுக, 17 வருடங்களாக எங்கே போனது என்று அமைச்சர் ஜெயக்குமார் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
ராஜீவ்காந்தி கொலைவழக்கில் தண்டிக்கப்பட்ட 7 பேரை விடுவிக்கும் முடிவை தமிழக அரசே எடுக்கலாம் என உச்ச நீதிமன்றம் நேற்று பரபரப்பு தீர்ப்பை அளித்தது. இந்த தீர்ப்பு குறித்தும், தமிழக அரசின் நிலைப்பாடு குறித்தும் அமைச்சர் ஜெயக்குமாரிடம் ஒன் இந்தியா சார்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர் அளித்த விவரங்கள்தான் இவை:

கேள்வி: 7 பேர் விடுதலை குறித்து தமிழக அரசின் நிலைப்பாடு என்ன?
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 7 பேரையுமே விடுதலை செய்யப்பட்ட வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் விருப்பம். எனவே இதுகுறித்து சட்டமன்றத்தில் ஏற்கனவே ஒரு தீர்மானமாக இயற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தோம். ஆனால் அதை மத்திய அரசு நிராகரித்து விட்டது. தற்போது உச்சநீதிமன்றமே மாநில அரசு குறிப்பாக ஆளுநரே இதுகுறித்து முடிவு செய்து கொள்ளலாம் என்று தீர்ப்பை தற்போது வழங்கிவிட்டது.
கேள்வி: உச்சநீதிமன்ற தீர்ப்பை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
இது உண்மையிலேயே வரவேற்கத்தக்க ஒன்று. நாங்கள் அன்று தீர்மானம் இயற்றி மத்திய அரசுக்கு அனுப்பியிருந்தபோதே இந்த முடிவை எடுத்திருந்திருக்கலாம். ஆனால் செய்யவில்லை. உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள இந்த தீர்ப்பானது மாநில அரசு முன்பு தெரிவித்த 7 பேர் விடுதலை செய்ய வேண்டும் என்ற அந்த கருத்துக்கு உறுதி சேர்க்கும் வகையில் உள்ளது. எனவே உச்சநீதிமன்ற தீர்ப்பில் என்ன சொல்லப்பட்டிருக்கிறதோ அதன்படியே உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் விருப்பமும் 7 பேர் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதுதான். எனவே ஜெயலலிதா எடுத்த முடிவில் அரசு உறுதியாக உள்ளது. அவரது விருப்பப்படிதான் இந்த அரசும் சாதகமான முடிவை எடுக்கும்.
கேள்வி: 7 பேர் விடுதலையில் தமிழக அரசு உடனடியாக அமைச்சரவையை கூட்டி முடிவெடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளாரே?
பதில்: இலங்கையில் அன்று உச்சக்கட்ட போர் நடந்தது. நம்முடைய தொப்புள்கொடி உறவாக இருந்த தமிழர்கள் முள்ளிவாய்க்காலில் ஒன்றரை லட்சம் பேர் படுகொலை செய்யப்பட்டார்கள். அன்று மிக வலுவான நிலையில் இருந்தது திமுக. ஆனால் இதுகுறித்து வாயே திறக்கவில்லையே. மத்திய காங்கிரசுடன் கூட்டணி அல்லவா அமைத்து கொண்டு செயல்பட்டது. கடந்த 17 வருடங்களாக இதுபற்றி எதுவுமே பேசாத திமுக தலைவர், இன்றைக்கு தீர்ப்பு வந்ததும் பேசுகிறார். காங்கிரசுடன் அன்றைக்கு திமுக கை கோர்த்துக் கொண்டு தமிழகத்தையே அழித்துவிட்டது. திமுக நினைத்திருந்தால், அன்றைக்கு சோனியாவை நிர்ப்பந்தப்படுத்தி 7 பேரை அன்றே விடுவித்திருக்கலாம். ஆனால் அதுபற்றி ஏதாவது திமுக தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டதா? ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் உச்சநீதிமன்றம் தீர்ப்பு இப்போது சொன்னவுடனேயே, தானும் இதில் வேகமாக இருப்பதாக காட்டிக் கொள்வது நிச்சயம் ஒரு சந்தர்ப்பவாதம்தான். தமிழக மக்களின் நலன் மீது எந்த ஒரு ஆர்வமும், நலனும் திமுகவுக்கு இல்லை. இது மக்களுக்கு உண்மை தெரியும். ஸ்டாலின் பேசுவது ஒரு சந்தர்ப்பவாத கருத்து என்று.
கேள்வி: சரி. இப்போதுள்ள உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு முழுக்க முழுக்க அதிமுகவின் முயற்சியால் கிடைத்த ஒன்றுதானா?
கண்டிப்பா. அதிமுக அன்று எடுத்த முழு முயற்சியின் விளைவுதான் இந்த தீர்ப்பு. அதுவும் இல்லாமல் இந்த விவகாத்தில் மாநில அரசுக்குதான் முழு அதிகாரம் உள்ளது என்பதையும் உறுதி செய்திருக்கிறது. எனவே அந்த தீர்ப்பினை முழுமையாக படித்து, சட்டநிபுணர்களுடன் ஆலோசித்து 7 பேர் விடுதலை செய்யும் முடிவில் தமிழக அரசு உறுதியாக உள்ளது.
இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications