ஊரை அடித்து ரூ.20 ஆயிரம் கோடி சொத்து சேர்த்த தினகரன் குடும்பத்தினர்- அமைச்சர் குற்றச்சாட்டு
தினகரன் குடும்பத்தினரிடம் ரூ. 20 ஆயிரம் மதிப்பிலான சொத்து உள்ளது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
சென்னை: தினகரன் குடும்பத்தினர் கொள்ளையடித்து ரூ.20 ஆயிரம் கோடி சொத்துகளை சேர்த்து வைத்துள்ளனர் என்று அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டினார்.
வடசென்னை தெற்கு மாவட்ட திரு.வி.க. நகர் பகுதி அதிமுக சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் புளியந்தோப்பில் நடந்தது. அப்போது அமைச்சர் ஜெயக்குமார் அதில் கலந்து கொண்டார்.
அதில் பேசியதாவது: தினகரன் ஏதோ மாமியார் வீட்டுக்கு செல்வதை பற்றி பேசி வருகிறார். அவருக்கு ஒன்றை கூறி கொள்கிறேன். நான் 8 முறை சிறைக்கு சென்றுள்ளேன். கட்சிக்காகவும், நியாயத்துக்காகவும் போராடி நான் சிறை சென்றுள்ளேன்.

வித்தியாசம் இருக்கிறது
நான் மட்டுமல்ல பாலகங்கா உள்ளிட்டோரும் சிறை சென்றுள்ளனர். நாங்கள் சென்றது தியாகத்துக்காக. தினகரன் சென்றது திருடிவிட்டு சிறைக்கு சென்றார். திருடனுக்கும் தியாகிகளுக்கும் வித்தியாசமா இருக்கிறது.

சொத்து எவ்வளவு
அவர் திருடி விட்டு சிறை சென்றதால் அவர் தியாகி ஆகி விட முடியுமா. 1991- ம் ஆண்டுக்கு முன்பாக அந்த குடும்பத்தினரின் சொத்து எவ்வளவு? இன்று எவ்வளவு சொத்து இருக்கிறது.

ரூ.20 ஆயிரம் கோடி
கிட்டத்தட்ட ரூ.20 ஆயிரம் கோடிக்கு மேல் அந்த குடும்பத்தின் சொத்து இருக்கிறது. ஜெயலலிதாவுக்கு தெரியாமல் தமிழ்நாட்டையே சூறையாடி இருப்பார்கள். கொள்ளையடித்து கோடி கோடியாக குவித்த பணத்தில் அதிமுகவை கைப்பற்றி விடலாம். ஆட்சியை கைப்பற்றி விடலாம் என்று சொன்னால் அவர்கள் வாயில் மண்ணுதான்.

சசிகலா குடும்பத்தை ஏற்கவில்லை
எல்லோரும் ஒன்று சேர்ந்து விட்டோம். இனி ஒன்றும் நடக்காது. பெண்கள் தினகரன் மீது கோபமாக இருக்கிறார்கள். இன்றைக்கு தமிழ்நாட்டு மக்களும் அந்த குடும்பத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்றார் அவர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications