ஜெ.நல்லா இருக்காங்க.. விரும்பும்போது வீட்டுக்கு போவாங்கன்னு சொன்னவரா இப்ப இப்படி சொல்றாரு!
ஜெயலலிதா ஆபத்தான நிலையில்தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என பிரதாப் ரெட்டி கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video

சென்னை: ஜெயலலிதா ஆபத்தான நிலையில்தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அப்பல்லோ மருத்துவமனை குழும தலைவர் பிரதாப் ரெட்டி தற்போது கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி இரவு உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சுமார் 75 நாள் சிகிச்சைக்குப் பிறகு அவர் உயிரிழந்ததாக கடந்த ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.
இது தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 75 நாட்களும் அவரை சசிகலாவை தவிர வேறு யாரும் சந்திக்கவில்லை.

ஏமாற்றத்துடன் திரும்பினர்..
எதிர்க்கட்சிகள் எத்தனையோ முறை வலியுறுத்தியும் ஜெயலலிதா சிகிச்சைப்பெறும் ஒரு புகைப்படம் கூட வெளியிடப்படவில்லை. தமிழக அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி மத்திய அமைச்சர்கள் மற்றும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோரும் ஜெயலலிதாவை பார்க்க வந்து ஏமாற்றத்துடன் திரும்பினர்.

விரும்பும்போது வீட்டுக்கு செல்வார்
யாருக்கும் ஜெயலலிதாவை பார்க்க அனுமதி கிடைக்கக்கவில்லை. ஜெயலலிதாவுக்கு காய்ச்சல் நீர்ச்சத்து குறைபாடுதான் என்று கூறிய அப்பல்லோ மருத்துவமனை குழும தலைவர் பிரதாப் ரெட்டி அவர் நலமாக உள்ளார், விரும்பும்போது வீட்டுக்கு செல்வார் என்றார்.

ஆதாரத்துடன் வெளியிட்ட புதியதலைமுறை
இதனால் ஜெயலலிதா எப்படியும் திரும்பிவிடுவார் என காத்திருந்த மக்களுக்கு அவரது மரண செய்தி பேரிடியாக இருந்தது. ஜெயலலிதா ஆபத்தான நிலையில்தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பதை சமீபத்தில் புதிய தலைமுறை தொலைக்காட்சி ஆதாரத்துடன் வெளியிட்டது.

ஆறுமுகசாமி கமிஷன் விசாரணை
இந்நிலையில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள விசாரணை கமிஷன் அவரது மரணம் குறித்து விசாரித்து வருகிறது. இதுதொடர்பாக சம்மன் அனுப்பப்பட்டதை தொடர்ந்து ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா, அண்ணன் மகனான தீபக், தீபாவின் கணவர் மாதவன் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

மருத்துவர்களுக்கும் சம்மன்
ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளித்த அப்பல்லோ மருத்துவர்களுக்கும் விசாரணை கமிஷன் சம்மன் அனுப்பியுள்ளது. இதுதொடர்பாக அப்பல்லோ மருத்துவமனை குழும தலைவர் பிரதாப் ரெட்டி இன்று செய்தியாளர்களிடம் பேசினார்.

ஆபத்தான நிலையில் தான்..
அப்போது ஜெயலலிதா ஆபத்தான நிலையில் தான் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டா அவர் கூறியுள்ளார். மக்கள் அச்சப்படக்கூடாது என்பதற்காகவே அவருக்கு காய்ச்சல் என அறிக்கை தரப்பட்டதாகவும் பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளார்.

என்னென்ன பூதம் கிளம்பபோகிறதோ..
ஜெயலலிதா நலமாக உள்ளார் விரைவில் வீடு திரும்புவார் என்று கூறிய பிரதாப் ரெட்டி தற்போது அந்தர்பல்டி அடித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதா மரண விவகாரத்தில் போக போக இன்னும் என்னென்ன பூதம் கிளம்ப போகிறதோ என்ற சந்தேகமும் வலுத்துள்ளது.

சசிகலா அனுமதிக்கவில்லை
ஜெயலலிதாவை நாங்கள் பார்த்தோம் அவர் இட்லி சாப்பிட்டார் என்று கூறியதெல்லாம் பொய் என்று அண்மையில் போட்டுடைத்தனர் அமைச்சர்கள். சசிகலா யாரையும் ஜெயலலிதாவை சந்திக்கவிடவில்லை என்றும் அமைச்சர்கள் குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications