அமைச்சர்களை காலில் விழவைப்பதுதான் “அம்மாவோட” பொழுதுபோக்கு- விஜயகாந்த் பேச்சு
திருச்சி: அமைச்சர்கள் தன் காலில் விழுந்து கும்பிடுவதைப் பார்த்து முதல்வர் ஜெயலலிதா ரசிக்கிறார் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
அமைச்சர்கள் எல்லாம் பொத்து பொத்தென்று காலில் விழுவதை மாண்புமிகு அம்மா அவர்கள் ரசிக்கிறார் என்றும் திருச்சியில் பிரச்சாரம் செய்த விஜயகாந்த் கூறியுள்ளார்.

திருச்சி காஜாப்பேட்டை பகுதியில் தேமுதிக வேட்பாளர் விஜய் குமாரை ஆதரித்து விஜயகாந்த் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, ''கடந்த முறை வெற்றிப் பெற்றவர்தான் திருச்சியில் அதிமுக சார்பில் மீண்டும் போட்டியிடுகிறார். எல்லாம் செய்து தருவதாக கூறிய எம்பி மீண்டும் ஓட்டுக்கேட்டு வருவார். இப்பவும் அதையே சொல்லுவார். எதுவும் செய்யமாட்டார்.
மின்சாரம், வேலைவாய்ப்பு, குடிநீர் உள்ளிட்ட மக்களுக்கு தேவையானதை செய்யாத அ.தி.மு.க.விற்கும் தி.மு.க.வுக்கும் ஓட்டு போடாதீங்க. காவிரி டெல்டாவில் மீத்தேன் வாயு திட்டத்தில் முதலில் கையெழுத்திட்டது தி.மு.க. இப்போது, அந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது. கருணாநிதி ஐந்து முறையும், மூன்று முறை ஜெயலலிதாவும் முதல்வராக இருந்து நாட்டை கெடுத்துவிட்டனர். இந்த இரண்டு பேரையும், இரண்டு கட்சியையும் நாட்டைவிட்டே விரட்டணும்.
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு கெட்டுவிட்டது. குறிப்பாக திருச்சியில் மிக மோசமாக உள்ளது. நேருவின் தம்பி ராமஜெயம் கொலை செய்யப்பட்டு மூன்று ஆண்டுகள் ஆகியும் இன்னும் கொலையாளிகளை கண்டுபிடிக்கவில்லை. ஸ்காட்லாந்துக்கு அடுத்தபடியாக ஒப்பிடப்படும் தமிழக போலீஸ் ராமஜெயம் கொலையை கண்டுபிடிக்காமல் தடுமாறுகிறது. அம்மா குடிநீர், அம்மா உணவகம்னு பேரு வச்சீங்களே அதைப்போல டாஸ்மாக் கடைகளுக்கும் 'அம்மா டாஸ்மாக்' என்று பெயர் வைக்க வேண்டியதுதானே.
சட்டசபையில் அனைவரும் ஜால்ரா அடிக்கிறார்கள். ஜெயலலிதா போகும்போது, ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் வரிசையாக நின்று தரையை பார்ப்பார்கள். ஏன் இங்கு நிற்கிறீர்கள், அனைவரும் போய் உங்களது துறை சம்மந்தமான வேலையை பாருங்கள் என்று சொல்லலாம் இல்லையா? ஆனால், சொல்ல மாட்டாங்க. ஏன் என்றால் அமைச்சர்கள் குனிந்து கும்பிடு போடுவதை அவங்க ரசிக்கிறாங்க. அவர்களை இப்படி பார்ப்பதில் அவருக்கு ஆசை அதிகம்" என்று பேசியுள்ளார் அவர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications