Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வெளியானது தமிழக அமைச்சரவை பட்டியல்: 13 புதுமுகங்களுக்கு வாய்ப்பு, அமைச்சர்கள் பலருக்கும் அதே துறை

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெயலலிதா தலைமையிலான புதிய அமைச்சரவை பட்டியல் இன்று மாலை வெளியானது. முதல்வர் வசமே காவல்துறை உள்ள நிலையில், புதுமுகங்களுக்கும் அமைச்சரவையில் வாய்ப்பு தரப்பட்டுள்ளது. அதேபோல, தற்போதைய அமைச்சர்கள் பலருக்கும் மீண்டும் அதே இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்காலிக சபாநாயகராக செம்மலை நியமிக்கப்பட்டுள்ளார்.

Jayalalitha cabinet announced after Governor call her to form the new government

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. இதையடுத்து ஆளுநர் ரோசய்யாவை இன்று மாலை சந்தித்த ஜெயலலிதா, ஆட்சியமைக்க தன்னை அழைக்குமாறு கேட்டுக்கொண்டதோடு, அதற்கான ஆதரவு எம்.எல்.ஏக்கள் கடிதத்தையும் வழங்கினார். இதையடுத்து ஜெயலலிதாவை ஆட்சியமைக்க ஆளுநர் ரோசய்யா அழைப்புவிடுத்தார்.

இந்நிலையில், புதிய அமைச்சரவை பட்டியலை ஆளுநர் மாளிகைக்கு அரசு அனுப்பி வைத்துள்ளது. அந்த பட்டியல் மாலை 6 மணியளவில் வெளியானது. அந்த பட்டியல் இதுதான்:

முதல்வர் ஜெயலலிதா- பொது நிர்வாகம், ஆட்சிப் பணி, காவல்துறை

ஓ. பன்னீர்செல்வம்- நிதித்துறை

திண்டுக்கல் சீனிவாசன் - வனத்துறை

எடப்பாடி பழனிச்சாமி- பொதுப்பணி, நெடுஞ்சாலை

செல்லூர் கே. ராஜூ- கூட்டுறவுத் துறை, தொழிலாளர் துறை

தங்கமணி- மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை

வேலுமணி- உள்ளாட்சி

ஜெயக்குமார்- மீன்வளம்

சிவி சண்முகம்- சட்டம்

கேபி அன்பழகன் - உயர் கல்வித்துறை

டாக்டர் சரோஜா- சமூக நலத்துறை

கேசி கருப்பண்ணன் -சுற்றுச்சூழல்

எம்சி சம்பத்; தொழில்துறை

ஆர் காமராஜ்- உணவு, இந்து சமய அறநிலையத் துறை

ஓ.எஸ். மணியன் - ஜவுளி, கைத்தறி

உடுமலை ராதாகிருஷ்ணன் - வீட்டு வசதி

சி விஜயபாஸ்கர்- மக்கள் நல்வாழ்வுத்துறை

எஸ்பி சண்முகநாதன் - பால்வளத்துறை

துரைக்கண்ணு- கால்நடை, விவசாயம்

கடம்பூர் ராஜூ- தகவல், விளம்பரத்துறை

உதயகுமார்- வருவாய்த்துறை

ராஜேந்திர பாலாஜி- ஊரக தொழில்துறை

பெஞ்சமின் - பள்ளிக்கல்வித்துறை, விளையாட்டு, இளைஞர் நலன்

கே.சி. வீரமணி- வணிகவரி

வெல்லமண்டி நடராஜன் -சுற்றுலாத்துறை

எஸ். வளர்மதி- பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலன்

ராஜலட்சுமி- ஆதி திராவிடர் நலத்துறை

டாக்டர் மணிகண்டன்- தகவல் தொழில்நுட்பம்

எம்.ஆர். விஜயபாஸ்கர்- போக்குவரத்து

புதிய அமைச்சரவை பதவியேற்பு விழா வரும் 23ம் தேதி திங்கள்கிழமை பகல் 12 மமஇக்கு, சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் வைத்து நடைபெற உள்ளது. சட்டசபை கூடியதும், தற்காலிக சபாநாயகர் செம்மலைக்கு பதிலாக வேறு சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படுவார். இதனிடையே சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் பெயர் முறைப்படி இன்று இரவு அரசிதழில் வெளியிடப்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+