வெளியிட்ட வேட்பாளர் பட்டியலை முழுதாக மாற்றிய ஜெயலலிதா.. இது 2011 கூத்து
சென்னை: 2016 தமிழக சட்டசபை தேர்தலில் 227 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் என்றும், 7 தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அதிமுக தலைமை கழகம் இன்று மதியம் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது.
வேட்பாளர்கள் பட்டியலையும், அதிமுக தலைமை வெளியி்ட்டுள்ளது. இதில் சில குளறுபடிகள் இருப்பதாக அதிமுக தோழமை கட்சியினர் அங்கலாய்க்கிறார்கள்.
குறிப்பாக, வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு சீட் ஒதுக்கப்படாதது அக்கட்சி வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திமுகவின் கனிமொழியுடன் ரகசியமாக கூட்டணி பற்றி வேல்முருகன் பேசியதாகவும் எனவேதான் அதிமுகவில் கழற்றிவிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கட்சிகள் ஏமாற்றம்
இதேபோல அதிமுக கூட்டணிக்கு சம்மதம் சொன்ன பல குட்டி கட்சிகளுக்கும் சீட் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. வாசனின் தமிழ் மாநில காங்கிரசுக்கும் கதவு அடைக்கப்பட்டுள்ளது. இதனால் வேட்பாளர் பட்டியல் மீண்டும் திருத்தப்பட்டு வெளியிடப்பட வாய்ப்புள்ள்ளதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது.

முன்பும் இப்படி
ஏனெனில், தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர் பட்டியலில் குளறுபடி வருவது என்பது அதிமுகவுக்கு புதிது கிடையாது. கடந்த 2011 சட்டமன்ற தேர்தலின் போது, அதிமுக கூட்டணிப் பேச்சு வார்த்தையில் தேமுதிக, சிபிஐ, சிபிஎம், மதிமுக, புதிய தமிழகம், பார்வர்டு பிளாக், ஆகிய பிரதான கட்சிகள் இருந்தன. ஆனால், யாரும் எதிர்பார்க்காமல் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

160 தொகுதிகளில்
கூட்டணியில் இருந்தவர்கள் தங்களுக்கு என்று கேட்டிருந்த அத்தனை தொகுதிகளையும் காலிசெய்து, அதிமுக சார்பில் போட்டியிடும் 160 வேட்பாளர்களை முதல் பட்டியலில் ஜெயலலிதா வெளியிட்டு விட்டார்.
அதிமுக கூட்டணியில் இருந்த கட்சிகள் எல்லாமே கோபப்படும் வகையில் முதல் பட்டியலை 2011ம் ஆண்டு மார்ச் 16ம் தேதி இரவு வெளியிட்டார் ஜெயலலிதா.

பேச்சுக்கு பின்பு ஆப்பு
இதில் விஷேசம் என்னவென்றால், அன்றைய தினம் காலையில்தான் யாருக்கு எந்த இடம், எவ்வளவு சீட் என்பது குறித்த கூட்டணிப் பேச்சு வார்த்தை நடந்து முடிந்திருந்தது. கூட்டணியினரின் கோபத்தால், பட்டியலை முழுமையாக மாற்றி, புதிய பட்டியலை ஜெயலலிதா வெளியிட்டார்.

தெரியவே தெரியாதாம்
முதலில் வெளியான பட்டியல் ஜெயலலிதா அனுமதியின்றி, அவரின் தோழி சசிகலா தரப்பில் இருந்து வெளியானது என்ற தகவலும் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில், இப்போது வெளியான பட்டியலும், கூட்டணியினருக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பட்டியல் மாறலாம் என்ற எதிர்பார்ப்பும் ஏறியுள்ளது.
-
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்! -
எடப்பாடியை சந்திக்காத இரு துருவங்கள்! தவெக தலைமையுடன் சிவி சண்முகம், விஜயபாஸ்கர் ரகசிய ஆலோசனை? -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
ரெண்டு பேருமே பெரிய புள்ளி.. தவெகவுக்கு தாவும் விஜயபாஸ்கர்! ரெடியான சண்முகம்! எடப்பாடிக்கு சிக்கல்! -
எடப்பாடிக்கு டிமிக்கி கொடுக்கும் 11 பேர்.. எஸ்கேப்பாகும் வேலுமணி.. அதிர்ச்சிக்கு ரெடியாகிறதா அதிமுக? -
தவெகவில் இணைந்தவர்களை கைவிட மாட்டோம்.. அதிமுகவினருக்கு மறைமுக சிக்னல் கொடுத்த புஸ்ஸி ஆனந்த்! -
எடப்பாடியிடம் சீறிய சிவி சண்முகம்.. மன்னிப்பு கடிதம் எழுதி தரவேண்டுமா? தந்தால் இமேஜ் என்னவாவது? -
தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம்..மீண்டும் இணையும் அதிமுக கோஷ்டிகள்! கரங்கள் இணையும்..மனங்கள் இணையுமா? -
அதிமுக இரு அணிகளின் வாபஸ் மனுக்கள் ஏற்கப்படுமா? இன்று அறிவிக்கும் சபாநாயகர்.. பரபரப்பில் ர.ரக்கள் -
உதிருது இரட்டை இலை! 4 இல்ல.. 10 பேர்! தவெகவுக்கு தாவும் 6 சமஉ.க்கள்? தனிப்பெரும்பான்மை நோக்கி விஜய் -
கண்கள் பனித்தது.. இதயம் இனித்தது! எடப்பாடி தான் எங்களுக்கு பொதுச் செயலாளர்! யூடர்ன் அடித்த வேலுமணி!












Click it and Unblock the Notifications