நீலகிரி மாவட்ட அ.தி.மு.க செயலாளர் நீக்கம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: நீலகிரி மாவட்ட அதிமுக செயலாளர் பொறுப்பில் இருந்து பால. நந்தகுமாரை அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா நீக்கியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "நீலகிரி மாவட்ட அ.தி.மு.க செயலாளர் பொறுப்பிலும், மாவட்ட ஜெ. ஜெயலலிதா பேரவைச் செயலாளர் பொறுப்பிலும் இருக்கும் பால.நந்தகுமார் இன்று முதல் அப்பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.
மேலும், நீலகிரி மாவட்ட அ.தி.மு.க செயலாளர் பொறுப்பில் எஸ்.கலைச்செல்வனும், நீலகிரி மாவட்ட ஜெ. ஜெயலலிதா பேரவைச் செயலாளர் பொறுப்பில் புத்திச்சந்திரனும் நியமிக்கப்படுகிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications