For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெ. மரணம் சசிகலா குடும்பத்தினர் மீது மக்களுக்கு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லையா?

ஆர்கே நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    தினகரனுக்கு 'விசிலடித்த' மக்கள்- வீடியோ

    சென்னை: ஆர்கே நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் தொடர்ந்து முன்னிலை வகித்து வருவது ஜெயலலிதா மரணம் சசிகலா குடும்பத்தினர் மீது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதை காட்டுகிறது.

    தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5ஆம் தேதி மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டது. சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி இரவு அனுமதிக்கப்பட்ட அவர் 75 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

    ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த 75 நாட்களும் அவர் குறித்த எந்த போட்டோவும் வீடியோவும் வெளியிடப்படவில்லை. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவரை சந்திக்க சசிகலா யாரையும் அனுமதிக்கவில்லை என அமைச்சர்கள் குற்றம்சாட்டினர்.

    கட்சியை கைப்பற்றிய சசி

    கட்சியை கைப்பற்றிய சசி

    ஜெயலலிதா போயஸ் கார்டன் இல்லத்தில் சசிகலா குடும்பத்தினரால் தாக்கப்பட்டதாக ஓபிஎஸ் அணியினர் குற்றம்சாட்டினர். அதற்கேற்றார் போலவே ஜெயலலிதா மறைந்த ஒரு மாதத்திலேயே அதிமுக பொதுச்செயலாளராகி கட்சியை கைப்பற்றினார் சசிகலா.

    கோலொச்சிய சசி குடும்பம்

    கோலொச்சிய சசி குடும்பம்

    ஜெயலலிதாவால் விரட்டியடிக்கப்பட்ட ஒட்டு மொத்த சொந்த பந்தத்தையும் போயஸ் கார்டனுக்கு வரவழைத்து மீண்டும் கோலொச்ச செய்தார் சசிகலா. ஜெயலலிதா கட்சியில் இருந்து நீக்கிய தினகரன் உள்ளிட்டோருக்கு மீண்டும் பதவி கொடுத்து அழகு பார்த்தார் சசிகலா.

    முதல்வராக ஆசைப்பட்ட சசி

    முதல்வராக ஆசைப்பட்ட சசி

    ஜெயலலிதா போலவே நடை, உடை, கொண்டை என அனைத்தையும் மாற்றிக்கொண்ட சசிகலா மற்றொரு ஜெயலலிதா போலவே தன்னை காட்டிக்கொள்ள முயற்சித்தார். மேலும் தமிழக முதல்வராக ஆசைப்பட்ட சசிகலா அதற்கான பணிகளில் ஜரூராக ஈடுபட்டதோடு அரியாசனம் ஏற நாளையும் குறித்தார்.

    இந்த நாளுக்காகதான்..

    இந்த நாளுக்காகதான்..

    அவரது இந்த செயல்பாடுகள் தமிழக மக்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. இந்த நாளுக்காகதான் காத்திருந்ததை போல இந்தது சசிகலாவின் நடவடிக்கைகள்.

    ஆபத்தான நிலையில்தான்

    ஆபத்தான நிலையில்தான்

    இதனால் ஜெயலலிதாவை திட்டம்போட்டு கொன்றது சசிகலாவும் அவரது குடும்பத்தினரும்தான் என பேச தொடங்கினர் தமிழக மக்கள். அதனை உறுதிப்படுத்துவது போல் ஜெயலலிதா ஆபத்தான நிலையில் தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என மருத்துவ அறிக்கைகள் தெரிவித்தன.

    மறந்து போன மக்கள்

    மறந்து போன மக்கள்

    ஜெயலலிதா மரணம் தமிழகத்தை ஆளத்துடிக்கும் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றே கருதப்பட்டது. ஆனால் நடந்து முடிந்த ஆர்கே நகர் இடைத்தேர்தல் முடிவுகள் தமிழக மக்கள் எவ்வளவு மறதியுடையவர்கள் என்பதை வெளிப்படுத்துகிறது..

    English summary
    Sasikala sister's son TTV Dinakaran leading in RK Nagar by poll. Jayalalitha death did not impact on Sasikala family in RK Nagar by poll.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X