For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெயலலிதா மரணம்: விசாரணை கமிஷனில் போனிலும் தகவல் தெரிவிக்கலாம்!

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை கமிஷனில் தகவல் தெரிவிக்க அறிவிக்கப்பட்ட தொலைபேசி எண் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை கமிஷனில் தகவல் தெரிவிக்க அறிவிக்கப்பட்ட தொலைபேசி எண் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி இரவு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டார். சுமார் 75 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு டிசம்பர் 5ஆம் தேதி அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

Jayalalitha death issue: The telephone number has come to function

இதைத்தொடர்ந்து அவரது மரணத்தில் மரணம் இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இந்நிலையில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் தமிழக அரசு விசாரணை ஆணையம் அமைத்து உத்தரவிட்டது.

இந்தக் குழு அண்மையில் விசாரணையை தொடங்கியது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக தகவல் அறிந்தவர்கள் அது தொடர்பான அறிக்கையை நவம்பர் 22ஆம் தேதிக்குள் தபால் மூலமாக அனுப்பலாம் என விசாரணை ஆணைய தலைவர் ஆறுமுகசாமி தெரிவித்திருந்தார்.

மேலும் தகவல் தெரிந்தவர்கள்ள தொலைபேசி வாயிலாகவும் தங்களை தொடர்புகொண்டு தெரிவிக்கலாம் என்றும் நீதிபதி ஆறுமுகசாமி தெரிவித்திருந்தார். இந்நிலையில் அதற்காக அறிவிக்கப்பட்டிருந்த 044 -2581 3599 என்ற தொலைபேசி எண் இன்று முதல் செயல்பாட்டிற்கு வநுதுள்ளது.

இதனை பயன்படுத்தி ஜெயலலிதா மரணம் தொடர்பான தகவல்களை தெரிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான சட்ட உதவிக்காக வழக்கறிஞர் நிரஞ்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.

English summary
Jayalalitha death issue: The telephone number has come to fuction which is announced by inquire commission.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X