ஜெயலலிதா என்னும் அகராதி
Subscribe to Oneindia Tamil
ஆண்களின் அதிகார குரல்களுக்கு நடுவே
அச்சம் தொலைத்த
ஒற்றைக் குரலாக
ஒலித்தது உன் குரல்
அவமானங்களின் மீதும்
அவதூறுகளின் மீதும்
அரசியலில் உனக்கு நீயே
பாதை சமைத்தாய்

அரசியல் பெண்களுக்கு
சிம்ம சொப்பனம் என்று
கோடு கிழித்திருந்தது
ஆணுலகம்
உன் போராட்டங்களுக்கு கிரீடம் சூட்டி
அதிகாரக் கோட்டினை அழித்தாய்
கோட்டையில் நிமிர்ந்தாய்
நெடிய முட்பாதையில்
தனியொருவளாய் நடந்தாய்
உன் சேலை கிழித்த சபையில்
பலர் கரம் கூப்ப வைத்தாய்
தேசத்தின் அரசியலைத்
தீர்மானிக்கும் மூன்றாம் சக்தியாக
முப்பது வருடங்களில் உருவெடுத்தாய்
வாழ்தல் இனிதென்று
காலம் சொல்ல விடவில்லை உன்னை
இருப்பினும்
தன்னம்பிக்கையின் அகராதியாகத்தான்
இப்போதும் நிலைத்திருக்கிறாய்
- வெண்பனி அம்மா
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications