ஜெயலலிதா செப்டம்பரிலேயே இறந்துவிட்டார்... கேரளா நம்பூதிரி பகீர்
ஜெயலலிதா செப்டம்பரில் இறந்தார் என்று கேரள நம்பூதிரி வேங்கட சர்மா தெரிவித்தார்.
Recommended Video

சென்னை: ஜெயலலிதாவின் உயிர் செப்டம்பர் மாதமே பிரிந்து விட்டது என்றும் சிறையில் சசிகலாவின் வாயை ஆவிதான் கட்டி வைத்துள்ளது என்றும் கூறி மற்றொரு சர்ச்சையை கேரளா நம்பூதிரி வேங்கட சர்மா கிளப்பியுள்ளார்.
இது குறித்து கேரள நம்பூதிரி வேங்கட சர்மா சன் நியூஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: ஜெயலலிதா ஒரு சித்தர். நிறைய மந்திரங்களை கற்று வைத்து கொண்டு அதை பயன்படுத்த முடியாமல் இருந்துள்ளார். பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவின் வாயை கட்டியதே ஜெயலலிதாவின் ஆவி தான்.
ஜெயலலிதாவின் உயிர் பிரிந்தது டிசம்பர் 4 ஆம் தேதியும் இல்லை, 5 ஆம் தேதியும் இல்லை. 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதமே அவர் உயிர் பிரிந்தது. போயஸ் கார்டனில் இருந்து அப்பல்லோவுக்கு செல்வதற்கு முன்பே அவர் இறந்துவிட்டார். தொண்டர்கள் செய்த பிரார்த்தனைகள் அவரை தெய்வ நிலையை அடைய வைத்துவிட்டது.

சசிகலா மீது கோபம்
ஜெயலலிதாவின் மரணம் இயற்கையானது அல்ல. தான் துன்புறுத்தப்பட்டுதான் உயிரிழந்ததாக அவரே என்னிடம் சொன்னார். ஜெயலலிதாவின் கோபம் சசிகலா மீது தான் அதிகமாக இருக்கிறது. தினகரனை பற்றி அவர் எதையும் சொல்லியது இல்லை.

ஆர் கே நகர் தேர்தல்
ஜெயலலிதாவுடன் 20 வருடங்கள் இருந்ததால் அவரது அமானுஷ்ய சக்திகளை தினகரன் பெற்று விட்டதால் ஆர்.கே. நகர் தேர்தலில் வெற்றி பெற்றார். ஜெயலலிதாவின் ஆவை ஆர்.கே. நகர் பக்கம் வராதபடி தடுக்கும் சக்தி தினகரனுக்கு உண்டு என்றார் வேங்கட சர்மா.

ஆறுமுகசாமி விசாரணை
ஜெயலலிதா மரண விவகாரத்தில் ஆறுமுகசாமி கமிஷன் விசாரணை நடத்தி வருகிறது. சிறையில் சசிகலா
ஜெயலலிதாவை நினைத்து அவரது நினைவு நாள் முதல் மௌன விரதம் இருக்கிறார் என்று தினகரன் தெரிவித்திருந்த நிலையில் அவரது வாயை கட்டியதே ஜெயலலிதாவின் ஆவி தான் என்று வேங்கட சர்மா கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

செப்டம்பர் மாதம்
ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி இறந்துவிட்டதாக அப்பல்லோ நிர்வாகம் அறிவித்தது. இந்நிலையில் அவர் இறந்து ஓராண்டு ஆன நிலையில் அவர் 4-ஆம் தேதியே இறந்துவிட்டதாக சசிகலாவின் சகோதரர் திவாகரன் தெரிவித்துவிட்டு பின்னர் அதை வாபஸ் பெற்றார். மேலும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும் ஜெயலலிதா 4-ஆம் தேதிதான் இறந்தார் என்று கூறி மற்றொரு சர்ச்சையை கிளப்பினார். தற்போது ஜெயலலிதா செப்டம்பர் மாதமே இறந்து விட்டார் என்றும் அப்பல்லோவுக்கு செல்லும் போது அவருக்கு உயிர் இல்லை என்றும் கூறியுள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications