மத்திய அரசிடம் வழங்கவுள்ள 2வது வெள்ள சேத அறிக்கை... அமைச்சர்களுடன் ஜெ. ஆலோசனை
சென்னை: தமிழகத்தில் பெய்த கன மழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் அக்டோபர் மாத இறுதியில் தொடங்கியது வடகிழக்குப் பருவமழை. கடந்த 1 மற்றும் 2ம் தேதிகளில் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், கடலூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்கள் பெரும் சேதத்தைச் சந்தித்துள்ளன.

இம்மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதி வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது தொடர்பான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் ஜெயலலிதா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், நிதி மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் நத்தம் ஆர். விசுவநாதன், வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சர் ஆர். வைத்திலிங்கம், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி, உயர்கல்வித்துறை அமைச்சர் பி. பழனியப்பன், தலைமைச் செயலாளர் கு. ஞானதேசிகன், தமிழ்நாடு அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் என்.எஸ். பழனியப்பன், வருவாய் நிர்வாக ஆணையர் அதுல்ய மிஸ்ரா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மத்திய அரசிடம் வெள்ள சேத பாதிப்புகள் குறித்து 2-வது துணை அறிக்கையை அளிப்பது குறித்து அப்போது ஆலோசிக்கப்பட்டது.
ஏற்கனவே வெள்ள சேத பாதிப்புகள் குறித்து முதல் அறிக்கையை கடந்த மாதம் 26-ந்தேதி வெள்ள சேதத்தை பார்வையிட வந்த மத்திய குழுவிடம் முதல்வர் வழங்கினார் என்பது நினைவு கூரத்தக்கது.
அதேபோல், தமிழகத்தில் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைக்க நவம்பர் மாதத்தில் மத்திய அரசுக்கு 8 ஆயிரத்து 481 கோடி ரூபாய் நிதி கோரி தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Mukesh Ambani: கோடி கோடியாய் லாபம் வந்தாலும்.. ஒரு ரூபா எடுக்கல.. அம்பானி நிலைமையை பாத்தீங்களா! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications