சென்னை மயிலாப்பூர் தொடங்கி பெரம்பூர் வரை 15 தொகுதிகளில் ஜெ.,அனல் பிரச்சாரம்
சென்னை: சென்னையில் உள்ள 15 தொகுதிகளிலும் தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். வேனில் பிரச்சாரம் செய்யும் ஜெயலலிதா மயிலாப்பூர், சேப்பாக்கம், திருவல்லிகேணி, ஆயிரம் விளக்கு, வேளச்சேரி, எழும்பூர், வில்லிவாக்கம், உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்து பேசுகிறார்.
தமிழக சட்டசபை தேர்தல் மே 16ம் தேதி நடைபெற உள்ளதை அடுத்து அரசியல் களத்தில் தேர்தல் பிரச்சாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. அரசியல் தலைவர்கள் அனைவரும் வாக்காளர்களை சந்தித்து அட்டாக் செய்து வருகின்றனர்.
தேர்தல் பிரச்சாரம் முடிவடைய இன்னும் 3 தினங்களே உள்ளதால் கடைசிகட்ட பிரச்சாரத்தில் அரசியல் தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். திமுக தலைவர் கருணாநிதி இன்று தனது சொந்த தொகுதியாக திருவாரூரில் பிரச்சாரம் செய்ய உள்ளார். இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, சென்னையில் இன்று 15 தொகுதிகளிலும் வாக்காளர்களை சந்தித்து அனல்பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்.

சென்னை மாவட்டத்தில் மொத்தம் 16 தொகுதிகள் உள்ளன. இதில் முதல்வர் ஜெயலலிதா தன் சொந்த தொகுதியான ஆர்.கே.நகர் தொகுதியில் கடந்த 6ம்தேதி வீதி, வீதியாக சென்று ஆதரவு திரட்டினார்.
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, வேளச்சேரி, மயிலாப்பூர், எழும்பூர், துறைமுகம், ராயபுரம், கொளத்தூர், வில்லிவாக்கம், பெரம்பூர், திரு.வி.க.நகர், விருகம்பாக்கம், அண்ணாநகர், சைதாப்பேட்டை, தி.நகர் ஆகிய 15 தொகுதிகளிலும் முதல்வர் ஜெயலலிதா இன்று பிற்பகல் தொடங்கி இரவு வரை ஆதரவு திரட்டுகிறார்.
முதல்வர் ஜெயலலிதா டாக்டர் ராதா கிருஷ்ணன் சாலையில் பிற்பகல் 3 மணிக்கு தன் சூறாவளி பிரச்சாரத்தை தொடங்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 3 மணி நேரத்துக்கும் மேல் அவர் 15 தொகுதிகளையும் சுற்றி வருவார்.
சென்னையில் இன்று அவர் எந்தெந்த வழித்தடங்களில் சென்று மக்களை சந்திக்கிறார் என்பதை அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ளது.
•முதல்வர் ஜெயலலிதா இன்று பிற்பகல் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, நடேசன் சாலை, ஐஸ்அவுஸ் காவல் நிலையம் சந்திப்பு, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, அண்ணா சாலை.
•வேல்ஸ் தோட்ட சாலை, ஈ.வி.கே.சம்பத் சாலை, சூளை தபால் நிலையம், சூளை நெடுஞ்சாலை, யானைக்கவுனி பாலம்- வால்டாக்ஸ் ரோடு சந்திப்பு, மூலக்கொத்தளம் சந்திப்பு.
•பேசின்பிரிட்ஜ், சத்திய மூர்த்தி நகர், எம்.கே.பி.நகர் சென்ட்ரல் அவென்யூ, டாக்டர் அம்பேத்கர் கல்லூரி சாலை, ஸ்டெரான்ஸ் ரோடு பகுதியில் பேசுகிறார்.
•ஓட்டேரி பாலம், கொன்னூர் மெயின் ரோடு, அயனாவரம் பஸ் நிலையம், ரெட்டி தெரு சந்திப்பு, பாடி மேம்பாலம், திருமங்கலம் மெயின் ரோடு பகுதியில் பிரச்சாரம் செய்கிறார்.
•கோயம்பேடு பஸ் நிலையம், விநாயகபுரம் பிரதான சாலை, எம்.எம்.டி.ஏ. காலனி, அண்ணா ஆர்ச், நெல்சன் மாணிக்கம் ரோடு, புஷ்பா நகர் பகுதியில் பிரச்சாரம் செய்கிறார்.
•வடக்கு உஸ்மான் ரோடு, தியாகராய நகர் பஸ் நிலையம், தெற்கு உஸ்மான் ரோடு, சைதாப்பேட்டை பனகல் மாளிகை,
கிண்டி பாலம், அண்ணா சிலை, கத்திப்பாரா மேம்பாலம் பகுதியில் பிரச்சாரம் செய்கிறார்.
•மத்திய கைலாஷ், மலர் மருத்துவமனை, திரு.வி.க. பாலம், ஆர்.கே. மடம் ரோடு, மயிலை மாங்கொல்லை, லஸ் கார்னர், ஆழ்வார் பேட்டை சந்திப்பு ஆகிய இடங்களில் ஜெயலலிதா பிரசாரம் செய்கிறார்.
•முக்கிய இடங்களில் அவர் திறந்த வேன் மூலம் ஆதரவு திரட்டுவார். மற்ற இடங்களில் அவர் வேனில் அமர்ந்தபடி வாக்காளர்களிடம் பிரச்சாரம் செய்கிறார். முதல்வர் ஜெயலலிதாவின் இந்த திடீர் பிரசாரத்தால் சென்னை மாவட்ட அ.தி.மு.க.வினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.
நெல்லையில் நாளை பிரச்சாரம்
வியாழக்கிழமையன்று மாலை நெல்லை நீதிமன்றம் எதிரே உள்ள பெல் பள்ளி மைதானத்தில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் முதல்வர் கலந்து கொண்டு பிரசாரம் செய்கிறார். நெல்லை, பாளையங்கோட்டை, ஆலங்குளம், அம்பாசமுத்திரம், நாங்குநேரி, ராதாபுரம், தென்காசி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், ஓட்டப்பிடாரம், கன்னியாகுமரி, நாகர்கோவில், கிள்ளியூர், பத்மநாபபுரம், குளச்சல், விளவங்கோடு ஆகிய 20 தொகுதிகளின் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஜெயலலிதா பேசுகிறார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications