துணைவேந்தர் நியமனத்தில் லஞ்சம்: ஈவிகேஎஸ் இளங்கோவன் மீது ஜெயலலிதா அவதூறு வழக்கு
சென்னை: துணைவேந்தர் நியமனத்தில் லஞ்சம் பெற்ற ஆளுநர் ரோசையா முதல்வர் ஜெயலலிதாவிற்கும் பங்கு கொடுத்தார் என்று டிவி பேட்டியில் கூறிய ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதா சார்பில் வழக்கறிஞர் ஜெகன் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று இளங்கோவன் மீது அவதூறு மனு தாக்கல் செய்துள்ளார்.
இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், ‘தனியார் தொலைக்காட்சியில் கடந்த மாதம் 30ந் தேதி ஒளிபரப்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தமிழக ஆளுநர் ரோசையா, துணைவேந்தர் நியமனத்தில் பணம் பெற்றதாகவும், அவ்வாறு வாங்கிய தொகையில், ஒரு பகுதியை எடுத்துக் கொண்டு, மீதியை முதல்வர் ஜெயலலிதாவுக்கு கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.

இது ஆதாரமற்ற, உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டாகும். வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் அவதூறான குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார். இதனால், முதல்வரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. எனவே, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
தமிழக ஆளுநர் ரோசையாவை அவதூறாக விமர்சித்தது தொடர்பாக இளங்கோவன் மீது மே 11 ஆம் தேதி வழக்குத் தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications